இந்தியா

1.5 வயது பேத்தியை கொன்ற பாட்டியின் காதலன் கைது: விசாரணையில் வெளியான பகீர் தகவல்; கேரளாவில் அதிர்ச்சி!

பாட்டியின் காதலனால் ஒன்றரை வயதுக் பெண் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் கொச்சினில் நடந்திருக்கிறது.

1.5 வயது பேத்தியை கொன்ற பாட்டியின் காதலன் கைது: விசாரணையில் வெளியான பகீர் தகவல்; கேரளாவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவின் கொச்சினில் உள்ள கல்லூர் பகுதியில் உள்ள ஓட்டலில்தான் கடந்த செவ்வாய் அன்று இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இதில் கொச்சினைச் சேர்ந்த ஜான் பெனோய் டி’க்ருஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

30 வயது மதிக்கத்தக்க ஜான் பெனாயும் அவரது காதலியான 45 வயதுடைய பெண்ணும் கடந்த சனிக்கிழமையன்று பெண்ணின் ஒன்றரை வயதான பேத்தியும் 4 வயதான ஆண் குழந்தையுடன் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில் புதன் கிழமையான நேற்று (மார்ச் 09) பால் குடிக்கும் போது குழந்தைக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டதாகச் சொல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அங்கு பரிசோதித்ததில் குழந்தை இறந்தது தெரியவந்திருக்கிறது. மேலும் குழந்தையின் இறப்பில் சந்தேகித்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

அதன் பிறகு விரைந்த போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இறந்த அக்குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

1.5 வயது பேத்தியை கொன்ற பாட்டியின் காதலன் கைது: விசாரணையில் வெளியான பகீர் தகவல்; கேரளாவில் அதிர்ச்சி!

அதன்பிறகு ஜான் பெனேயிடமும் அவருடன் இருந்த அந்த பெண்ணிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில், கொச்சியைச் சேர்ந்த சஜிஷ் என்பவரின் தாய் தான் அந்த 45 வயது பெண் என்பதும். சஜிஷின் மனைவி வெளிநாட்டில் பணியாற்றுவதால் சஜிஷின் குழந்தைகளை அந்த பெண்தான் கவனித்து வருகிறாராம்.

சஜிஷின் தந்தையும் தாயும் பிரிந்து வாழ்வதாகவும், அந்த பெண்ணுக்கும் ஜான் பெனேய்க்கும் இடையே ஏற்பட்ட நட்புறவு காதலாக மாறி அடிக்கடி ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி வருவதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் சம்பவம் நடந்த அன்று இருவரும் ஒன்றாக இருப்பதற்கு பெண் குழந்தை தொந்தரவாக இருந்ததால் அக்குழந்தையை அறையில் இருந்த தண்ணீர் நிரப்பிய வாளியில் போட்டு ஜான் மூழ்கடிக்கச் செய்திருக்கிறார் என தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து ஜான் பெனெயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். மேலும் சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories