இந்தியா

ஈன்றெடுத்த பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை; தாய் தந்தையின் கொடூர செயலால் அதிர்ந்து போன ரயில்வே போலிஸ்!

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் ரயிலில் பயணித்த கணவன் மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்த தகவலால் போலிஸாரே அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

ஈன்றெடுத்த பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை; தாய் தந்தையின் கொடூர செயலால் அதிர்ந்து போன ரயில்வே போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜாரத்தின் ராஜ்கோட்டை நோக்கி தெலங்கானாவின் செகந்திராபாத்தில் இருந்து 16 மாதமே ஆன பெண் குழந்தையுடன் கணவன் மனைவி இருவர் ரயிலில் பயணித்திருக்கிறார்கள்.

அப்போது குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாத காரணத்தால் சந்தேகமடைந்த சகப்பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவிக்க அவர் ரயில்வே போலிஸுக்கு தகவலை பரிமாற்றியுள்ளார்.

இதனையடுத்து ரயில் மகாராஷ்டிராவின் சோலாப்பூருக்கு வந்ததும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட அந்த கணவன் மனைவியிடம் ரயில்வே போலிஸார் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அப்போது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அந்த குழந்தை இறந்திருப்பது அதற்கு காரணம் பாலியல் தொந்தரவு எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த பச்சிளம் குழந்தையை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் அதற்கு தாயும் உடைந்தையாக இருந்ததோடு குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றதையும் அறிந்து போலிஸார் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனையடுத்து இறந்த குழந்தையை ரகசியமாக சொந்த ஊரில் வைத்து அடக்கம் செய்வதற்காக ரயிலில் வந்தபோதுதான் சிக்கியிருக்கிறார்கள். விசாரணையை அடுத்து பிடிபட்ட கணவன் மனைவியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories