இந்தியா

“இந்தியாவை இந்து நாடாக மாற்ற யாரையும் கொல்வோம்” - பா.ஜ.க தலைவர்கள் முன்பு சாமியார்கள் சர்ச்சைப் பேச்சு!

இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற யாரையும் கொலை செய்வோம் என சாமியார்கள் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“இந்தியாவை இந்து நாடாக மாற்ற யாரையும் கொல்வோம்” - பா.ஜ.க தலைவர்கள் முன்பு சாமியார்கள் சர்ச்சைப் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியல் அதிகரித்துள்ளது. மேலும் 'இந்தியா இந்துக்களின் நாடு' என்ற பிரச்சாரத்தையும் பா.ஜ.க உட்பட அதன் ஆதரவு அமைப்புகள் தொடர்ச்சியாக செய்து வருகிறது.

இந்நிலையில், பா.ஜ.க தலைவர்களின் முன்னிலையிலேயே இந்தியா இந்துக்களின் நாடாக மாற்றுவதற்கு யாரையும் கொலை செய்வோம் என சாமியார்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட மாநிலம், ஹரித்வாரில் தர்ம சன்சத் என்ற இந்து அமைப்பு கடந்த 17ம் தேதியிலிருந்து 19ம் தேதி வரை மூன்றுநாட்கள் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த மாநாட்டில் உத்தரப் பிரதேச அமைச்சர் ராஜேஷ், பா.ஜ.க தலைவர் அஸ்வினி உபாத்யாயா உட்பட பல பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாட்டில் கலந்து கொண்டவர்கள் இறுதிநாளில், "இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றுவோம். இதற்காகக் கொலையும் செய்வோம்" என உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். இவர்களின் இந்த உறுதிமொழி தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, இந்தியாவில் வெறுப்பைத் தூண்டும் வகையில் மாநாடு நடத்திய தர்ம சன்சத் என்ற இந்து அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories