அரசியல்

“டம்மி முதலமைச்சருக்கு துணிச்சல் இல்லை!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

“அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக திசைதிருப்பல் அரசியலில் இறங்குகிறார் முதலமைச்சர் விஜய்.”

“டம்மி முதலமைச்சருக்கு துணிச்சல் இல்லை!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பெண் ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியும், அவரது வீட்டின் முன் சென்று தகராறு செய்தும் சர்ச்சையில் சிக்கிய த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதும், சாமானியர் மீது தாக்குதல் நடத்திய துணை சபாநாயகர் ரவி சங்கர் மீதும் இதுவரை எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

“கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை இந்த டம்மி முதலமைச்சர் இன்னமும் பாதுகாப்பது ஏன்?

கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?

“டம்மி முதலமைச்சருக்கு துணிச்சல் இல்லை!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?

டம்மி முதலமைச்சருக்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.

ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக திசைதிருப்பல் அரசியலில் இறங்குகிறார்.

ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று ஆன்லைன் மாஃபியாவையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?

மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.”

banner

Related Stories

Related Stories