தமிழ்நாடு

பதிலளிக்காமல் வதந்தி என்று மறுப்பது ஏன்? : நிர்மல்குமாருக்கு தி.மு.க மகளிர் அணி கேள்வி!

வழக்கம்போல பொய்யை மட்டுமே பேசி அமைச்சர் நிர்மல்குமார் தப்பிவிட்டதாக தி.மு.க மகளிர் அணி விமர்சித்துள்ளது.

பதிலளிக்காமல் வதந்தி என்று மறுப்பது ஏன்? : நிர்மல்குமாருக்கு தி.மு.க மகளிர் அணி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆனால், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் இதுவரை மௌனமாகவே இருந்து வருகிறார். அமைச்சர்களோ இதற்கு உரிய பதில்களைச் சொல்லாமல் மழுப்பி வருகிறார்கள்.

இதற்கிடையில், த.வெ.க. அமைச்சர் நிர்மல்குமார், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம் வதந்தி என்றும், தனிப்பட்ட விவகாரத்தில் தலையிட விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ள கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வதந்தி என்று சொன்ன அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தி.மு.க மகளிர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ” அது வதந்தி என்றால், பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கடிதம் அளித்துள்ளதாக, நீங்கள் பாரம்பரியப் பத்திரிகை என்று மெச்சிக்கொள்ளும் தினத்தந்தி வெளியிட்ட செய்தி பொய்யா?

இல்லை, விழுப்புரம் சரக டிஐஜி அருள் தாஸ் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் அநாகரிகமாக நடந்து கொண்டதை உறுதிப்படுத்தியதாக வெளியான செய்தியும் பொய்யா?

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீது இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவற்றுக்குப் பதிலளிக்காமல் வதந்தி என்று மறுப்பது ஏன்?

மரத்துக்கு மரம் தாவும் ஜீவராசியைப் போலக் கட்சி விட்டுக் கட்சி தாவும் அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள், இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் வழக்கம்போல பொய்யை மட்டுமே பேசி தப்பிவிட்டார்” என தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories