இந்தியா

“பா.ஜ.க ஆட்சியில் தொடர்ந்து அதிகரிக்கும் கும்பல் படுகொலை” : பிரதமர் மோடியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி!

பா.ஜ.க ஆட்சியில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

“பா.ஜ.க ஆட்சியில் தொடர்ந்து அதிகரிக்கும் கும்பல் படுகொலை” : பிரதமர் மோடியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சியில், அடித்துக் கொலைசெய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என ஒன்றிய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவில் ‘அடித்துக் கொலை’ செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு பிரதமர் மோடிக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு ‘அடித்துக் கொலை’ என்ற வார்த்தையையே பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்தவுடன் இது போன்ற கொலை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு ராகுல் காந்தி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு பேர் கும்பல் ஒன்றால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். சீக்கிய மதத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories