இந்தியா

கண்ணாடிக்கு பின்னால் ரகசிய அறை.. 17 இளம் பெண்களை மீட்ட போலிஸ்: நடந்தது என்ன?

மும்பையில் ரகசிய அறையிலிருந்த 17 பெண்களை போலிஸார் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணாடிக்கு பின்னால் ரகசிய அறை.. 17 இளம் பெண்களை மீட்ட போலிஸ்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பை அந்தேரியில் உள்ள நட்சத்திர பார் விடுதி ஒன்றில் கொரோனா விதிகளை மீறி இரவு முழுவதும் பெண்கள் நடன நிகழ்ச்சி நடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மும்பை போலிஸார் அந்த விடுதியில் இரவு நேரத்தில் திடீர் சோதனை செய்தனர். ஆனால் புகார் வந்த படி பெண்கள் நடன நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. மேலும் நடன பெண்களும் அங்கு இல்லை.

பின்னர், விடுதியில் வேலை செய்யும் பணியாளர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போதும் அவர்கள் இங்கு எவ்விதமான நடன நிகழ்ச்சிகளும் நடத்துவதில்லை என கூறினர்.

மீண்டும் போலிஸார் விடுதி முழுவதும் சோதனை செய்தனர். அப்போது அறையொன்றில் பெரிய கண்ணாடி இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலிஸார் அந்த கண்ணாடியை உடைத்தனர்.

அப்போது அந்த கண்ணாடிக்குப் பின்னால் அறை ஒன்று இருந்தைப் பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த அறையில் சென்று பார்த்தபோது 17 இளம் பெண்கள் பதுங்கிருந்தனர்.

மேலும் அந்த அறையில் இளம் பெண்கள் தங்குவதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்களை மீட்ட போலிஸார் இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து விடுதியின் நிர்வாகத்தின் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்களைக் கொண்டு பாலியல் தொழில் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories