இந்தியா

பட்டியலின இளைஞர்களை எச்சிலை நக்கவைத்து சித்திரவதை.. பீகாரில் கொடூரச் சம்பவம்!

பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு வாக்களிக்காத பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரை கொடுமைப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலின இளைஞர்களை எச்சிலை நக்கவைத்து சித்திரவதை.. பீகாரில் கொடூரச் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வந்த் சிங் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் பல்வந்த் சிங் தோல்வியடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பல்வந்த் சிங், பட்டியலின இளைஞர்களைப் பிடித்து நீங்கள் வாக்களிக்காததால்தான் தேர்தலில் தோற்றேன் எனக் கூறி அவர்களை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார்.

மேலும், சாலையில் எச்சிலைத் துப்பி, அதை நாக்கால் நக்க வேண்டும் என பட்டியலின இளைஞர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ தொடர்பாக போலிஸார் பல்வந்த் சிங்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாகவே உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தைப் போன்றே பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரிலும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

75வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த நாட்டில்தான் இப்படியான கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கின்றன என இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories