இந்தியா

தலைமறைவாக இருந்தவரை சரமாரியாக வெட்டி சாய்த்த கும்பல்; கேரளாவில் பட்டப்பகலில் நடந்த பகீர் சம்பவம்!

கேரளாவில் சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைமறைவாக இருந்தவரை சரமாரியாக வெட்டி சாய்த்த கும்பல்; கேரளாவில் பட்டப்பகலில் நடந்த பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்திற்குட்பட்ட செம்பகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுதீஷ். சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் சுதீஷ் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் , சுதீஷ் ஆற்றங்கல் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த கும்பல் சுதீஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தது. இதனால், பயந்துபோன அவர் போத்தன்கோட் பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் தலைமறைவாக இருந்துவந்தார். இதை அறிந்து கொண்ட அந்த கும்பல் அங்குச் சென்று அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

பின்னர், அங்கிருந்து அந்த கும்பல் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் ஏறித் தப்பிச் சென்றது. இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுதீஷை கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்ற ஆட்டோ ஓட்டுரை போலிஸார் கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories