உலகம்

”ChatGPT-யை முழுமையாக நம்ப வேண்டாம்” : பயனர்களுக்கு OpenAI தலைவர் சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை!

ChatGPT-யை முழுமையாக நம்ப வேண்டாம் என OpenAI தலைவர் சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

”ChatGPT-யை முழுமையாக நம்ப வேண்டாம்” : பயனர்களுக்கு OpenAI தலைவர் சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

21 ஆம் நூற்றாண்டில் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. மக்களின் பயன்பாடுகளும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் அறிவியல் பூர்வமானதாக இருந்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, கணினியில் நாம் ஒரு விஷயத்தை தேடினால் அது குறித்த தகவல்கள் நமக்கு கொட்டி கிடக்கும். இதில் நமக்கு தேவையானதை நாம் பயன்படுத்திக் கொள்வோம்.

ஆனால் தற்போது ChatGPT வந்த பிறகு இது இன்னும் எளிமையாகிவிட்டது. ஒரு தகவல் குறித்து நாம் கேட்டால், மனிதர்கள் பேசுவதல்போல் அனைத்து தகவல்களையும் உரையாடல் மூலமாக ChatGPT (AI) தொழில்நுடபம் நமக்கு கொடுத்து விடுகிறது.

அதேபோல் ஒரு வடிவமைப்பாளரை கொண்டு நமக்கு தேவையான படங்களை நாம் பெற்று வருகிறோம். வந்தோம். ஆனால் இப்போது நமக்கு இப்படிதான் ஒருபடம் வேண்டும் என்று ChatGPTயில் கேட்டால் அடுத்த 2 நிமிடங்களையே அந்த படம் நமக்கு கிடைத்து விடுகிறது.

இதனால் தற்போது ChatGPT-ஐ அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், ChatGPT மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம் என OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து Broadcast-ல் பேசிய சாம் ஆல்ட்மேன், ”மக்கள் ChatGPT மீது மிக அதிக அளவிலான நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். எந்தவொரு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தையும் போலவே, பயனர்கள் ChatGPT ஐ ஆரோக்கியமான சந்தேகத்துடன் அணுக வேண்டும். செயற்கை நுண்ணறிவு தவறான தகவல்களையும் கணிப்புகளையும் உருவாக்கக் கூடியதே. செயற்கை நுண்ணறிவும் தவறுகளைச் செய்யும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories