இந்தியா

“200 மில்லியன் Subscriber-களை கடந்த உலகின் முதல் YOUTUBE சேனல் - ‘T SERIES’ சாதனை!

200 மில்லியன் சந்தாதாரர்களைக் கடந்த உலகின் முதல் YouTube சேனல் என்ற பெருமையைப் பெற்றது T Series.

“200 மில்லியன் Subscriber-களை கடந்த உலகின் முதல் YOUTUBE சேனல் - ‘T SERIES’ சாதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

Google நிறுவனத்திற்குச் சொந்தமான YouTube தளம் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து தனி நபர்கள் பலரும் தங்களுக்கு என்று தனி YouTube சேனலை தொடங்கி வருவாய் ஈட்டி வருகிறார்கள். மேலும் YouTube சேனல்கள் மூலம் பிரபலமடைந்தவர்களும் இருக்கிறார்கள்.

இசையில் தொடங்கி சமையல் வரை எல்லா வடிவத்திலும் YouTube சேனல்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படி இயங்கும் சேனல்களில் அதிக சந்தாதாரர்களை கொண்டிருக்கும் சேனல்களுக்கு YouTube பரிசுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த சினிமா மற்றும் இசை வெளியீட்டு நிறுவனமான T Series, YouTube சேனல் 200 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்ற உலகின் முதல் YouTube சேனல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

T-Series நிறுவனம் 1983ஆம் ஆண்டு இசைக்கலைஞர் குல்ஷன் குமாரால் நிறுவப்பட்டது. பிறகு இந்த நிறுவனம் இசையில் கவனம் செலுத்தியது. பிறகு YouTube வந்ததை அடுத்து அதிலும் கால் பதித்தது.

2006ஆம் ஆண்டு T Series நிறுவனம் YouTube சேனலை தொடங்கியது. இந்த 15 ஆண்டுகளில் 383 மில்லியன் வாடிக்கையாளர்களைத் தன்வசப்படுத்தியுள்ளது. மேலும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

தமிழ், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் மொத்தம் 29 சேனல்கள் உள்ளன. இந்த மொத்த சேனல்களிலும் 383 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். இதனால் ரூ. 72 கோடி வரை மாத வருமானம் ஈட்டிவருவதாகவும் கூறப்படுகிறது. T Series YouTube சேனலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories