இந்தியா

“பென்சில், பேனா தர்றேன்” என அழைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... ரவுடிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!

பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட நபரைப் பொதுமக்கள் சாலையில் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பென்சில், பேனா தர்றேன்” என அழைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... ரவுடிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலம், பிரகாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னா ராவ். இவர் நேற்று பள்ளி ஒன்றிற்குச் சென்று அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பென்சில், பேனா, ரப்பர், நோட்டு உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார்.

பிறகு சில மாணவிகளிடம், வீட்டிற்கு வந்தால் பென்சில், பேனா, ரப்பர் கொடுக்கிறேன் என கூறியுள்ளார். இதனால் அந்த மாணவிகள் பள்ளி முடிந்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது, மாணவிகளிடம் சின்னா ராவ் தவறாக நடந்து கொண்டுள்ளார். பிறகு வீட்டிற்குச் சென்ற மாணவிகள் நடந்தது குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அவர்கள், சின்னா ராவ் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை நடுரோட்டில் இழுத்துப்போட்டு பெண்கள் பலரும் சேர்ந்து தர்ம அடி கொடுத்தனர்.

இதுகுற்றி தகவல் அறிந்த போலிஸார் அங்கு வந்து பொதுமக்களைத் தடுத்து நிறுத்தினர். பிறகு போலிஸார் வழக்குப்பதிவு செய்து சின்னா ராவைக் கைது செய்தனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரைத் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் சின்னா ராவ் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், அவர் அப்பகுதியில் ரவுடி போல் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories