இந்தியா

பாலியல் வன்கொடுமை... வீடியோ காட்டி பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் பறித்த இளைஞர்: விசாரணையில் வெளிவந்த பகீர்!

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து பணம் பறித்த இளைஞரை போலிஸார் கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமை... வீடியோ காட்டி  பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் பறித்த இளைஞர்: விசாரணையில் வெளிவந்த பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹரியானா மாநிலம் குருக்கிராம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் சாகர் சிங் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் இருவரும் நட்பாகப் பழகி வந்துள்ளனர். அந்த பெண்ணிடம் சாகர் சிங் டெல்லியைச் சேர்ந்த வைர வியாபாரியின் மகன் என கூறியுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த பெண்ணின் ஆசைகளைத் தூண்டியுள்ளார்.

இதையடுத்து உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் விடுதி ஒன்றில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். அப்போது அந்த பெண்ணிடம் சாகர் சிங், தன் பெயரிலுள்ள 2 கோடி ரூபாய் செக்கை வங்கியில் போட்டு எடுப்பதற்கு ஒரு லட்சம் தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.

இதை நம்பிய அந்தப் பெண் ஒரு லட்சம் கொடுத்துள்ளார். அப்போது அறையில் இருவரும் தனியாக இருந்ததை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை காட்டி தொடர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் பணமும் பறித்துள்ளார். இப்படி வன்கொடுமை வீடியோவை மட்டுமே காட்டி ஐந்து மாதத்தில் மட்டும் ரூ.6.5 லட்சம் வரை வாங்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் சாகர் சிங்கின் வன்முறையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் சாகர் சிங் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர் இதேபோன்று வேறு பெண்களை ஏமாற்றியுள்ளாரா? என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories