இந்தியா

சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை ஆப் செய்யவும்... வாகன ஓட்டிகளுக்கு டெல்லி அரசு புதிய உத்தரவு!

காற்று மாசு குறைக்கும் வகையில் சிக்னல்களில் நிற்கும்போது வாகனங்களை அணைத்து வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை ஆப் செய்யவும்... வாகன ஓட்டிகளுக்கு டெல்லி அரசு புதிய உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் இந்தியாவில் மக்கள் சுவாசிக்கும் காற்றிலேயே அதிகபடியான மாசு கலந்துவிட்டதாக ஆய்வு ஒன்றும் எச்சரிக்கை செய்துள்ளது.

இதையடுத்து காற்று மாசுவை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வண்டிகளை அணைத்து வைக்க வேண்டும் என வாகன போட்டிகளுக்கு டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்," வாரத்தில் ஒரு நாளாவது கார், இருசக்கர வாகனம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் மெட்ரோ ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தைப் பயன்படுத்த மக்கள் உறுதியேற்க வேண்டும்.

மேலும் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வாகனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கும் திட்டம் வரும் 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் இதைக் கடைப்பிடிக்க முன்வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories