இந்தியா

“பேஸ்புக்கில் பழக்கம்.. 16 வயது சிறுமி 4 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை” : கர்நாடகாவில் நடந்த கொடூரம்!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பேஸ்புக்கில் பழக்கம்.. 16 வயது சிறுமி 4 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை” : கர்நாடகாவில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்டுவால் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பேஸ்புக் மூலம் உடுப்பி மாவட்டம் காபு பகுதியைச் சேர்ந்த சரத்செட்டி என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் தொலைபேசி மூலம் சிறுமியிடன் சரத்செட்டி தொடர்ந்து பேசியுள்ளார். பின்னர் சரத்செட்டியின் உறவினரான மாருதி மஞ்சுநாத் என்பவருக்கும் பழக்கம் ஏற்படுத்தி, பின்னர் அவரும் அந்த சிறுமியுடன் வாட்ஸ்அப் மூலம் வீடீயோக்கள் ஷேர் செய்வது போன்று பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதியன்று சிறுமியை நேரில் சந்திக்கலாம் என மங்களூருக்கு வரவழைத்து, பின்னர் மங்களூரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி சரத்செட்டி மற்றும் மாருதி மஞ்சுநாத் ஆகிய இருவரும் வன்கொடுமை செய்து விட்டு, பின்னர் தனது நண்பர்களான இதயத்துல்லா என்பவருக்கும் போன் செய்து அவரை வரவழைத்து அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்ய விட்டு, பின்னர் லாட்ஜ் ஊழியரான சதீஷ் என்பவரும் பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிறுமி தன் வீட்டுக்கு செல்லும் போது பிரச்சனை வெளியில் தெரிய வந்தது. பின்னர் மங்களூரு லேடி கொஷன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு சம்பவம் தொடர்பாக பண்ட்வால் டவுன் போலிஸார் வழக்குப்பதிவு செய்து சரத்செட்டி, மாருதி மஞ்சுநாத், லாட்ஜ் சதீஷ் ஆகியோரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories