இந்தியா

1 மணி நேரத்தில் 25,000 புக்கிங்.. புதிய சாதனை படைத்த மஹிந்திரா XUV 700.. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

இந்தியாவில் அதிவேகமாக 25 ஆயிரம் முன்பதிவுகளை கடந்த கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது மஹிந்திரா XUV700.

1 மணி நேரத்தில் 25,000 புக்கிங்.. புதிய சாதனை படைத்த மஹிந்திரா XUV 700.. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா அறிமுகம் செய்துள்ள மஹிந்திரா XUV 700 கார் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தனது XUV 700 மாடலுக்கான முன்பதிவை இன்று துவங்கியது. முன்பதிவு துவங்கிய 57 நிமிடங்களிலேயே 25,000 XUV 700 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தியாவில் அதிவேகமாக 25 ஆயிரம் முன்பதிவுகளை கடந்த கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700.

புதிய XUV 700 மாடலுக்கான முன்பதிவை ஆன்லைன் மற்றும் விற்பனை மையங்களில் மேற்கொள்ளலாம் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், அமோக வரவேற்பு காரணமாக முதல்நாள் முன்பதிவு 1 மணி நேரத்திலேயே நிறுத்தப்பட்டது.

இந்த முதல் 25,000 கார்களை முழுமையாக தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க 6 மாதம் ஆகும் எனக் கூறப்படுகிறது. மஹிந்திரா மீண்டும் அடுத்த 25,000 கார்களுக்கான புக்கிங்கை நாளை (அக்.8) காலை 10 மணிக்கு துவங்க உள்ளது.

1 மணி நேரத்தில் 25,000 புக்கிங்.. புதிய சாதனை படைத்த மஹிந்திரா XUV 700.. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

இந்தியாவில் மஹிந்திரா XUV 700 மாடல் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் ஐந்து மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

அதிகாரப்பூர்வமாக இந்த கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலை:

மஹிந்திரா XUV700 MX பெட்ரோல் எம்டி விலை: ரூ 11.99 லட்சம்

மஹிந்திரா XUV700 MX டீசல் எம்டி விலை: ரூ .12.49 லட்சம்

மஹிந்திரா XUV700 AX3 பெட்ரோல் எம்டி விலை: ரூ .13.99 லட்சம்

மஹிந்திரா XUV700 AX5 பெட்ரோல் எம்டி விலை: ரூ .14.99 லட்சம்

banner

Related Stories

Related Stories