இந்தியா

“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன?

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் 15 வயது சிறுமியை 33 பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதியன்று ஆண் நண்பண் ஒருவன் தனியாக அழைத்துச் சென்று சிறுமியை பலவந்தமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

மேலும் இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அந்த சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான். அதுமட்டுமல்லாது, சிறுமியின் ஆபாச வீடியோவை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.

அவர்களும் அந்த சிறுமியை மிரட்டி டொம்பிவிலி, பத்பாபுர், முர்பத் மற்றும் ரபேல் என மாவட்டத்தின் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமையில், 16 முதல் 23 வயதுடையவர்கள் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை உணர்ந்த பெற்றோர் சிறுமியை அழைத்து விசாரித்தபோது சிறுமி நடந்தவற்றைக் கூறியுள்ளார். பின்னர், சமூக ஆர்வலரின் உதவியுடன் குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளனர்.

“33 பேர்.. 15 வயது சிறுமியை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்”: 28 பேர் கைது - நடந்தது என்ன?

அதன்படி, சிறுமி தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவரை செல்போனில் அழைத்துச் அவர்களின் இடத்திற்குச் சென்றுள்ளார். சிறுமியை பின்தொடந்து குடும்பத்தினர் ஆட்டோவில் பின்தொடர்ந்துள்ளனர். இதனிடையே குடும்பத்தினர் சென்ற ஆட்டோ பழுதாகி நின்றுவிட, சிறுமி தனது இருப்பிட லொகேஷனை ஷேர் செய்ததை, குடும்பத்தினர் போலிஸாருக்கு அனுப்பி விசயத்தை சொல்லியுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் அங்குச் சென்று சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்தனர். இதனையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் போரில், விசாரணை செய்த போலிஸார் 28 பேரை கைது செய்தனர். மீதமுள்ளவர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கைதானவர்கள் மீது பாலியல் வன்புணர்வு, மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு, 16 வயதுக்கு கீழ் இருப்பவர்களை பாலியல் வன்புணர்வு செய்தல் போன்ற பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மகாராஷ்ராவில் 15 வயது சிறுமியை 33 பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories