இந்தியா

நிர்வாண பூஜை எனக் கூறி 7 மாதங்களாக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் : நாசிக்கில் கொடூரம்!

நாசிக்கில் பெண் ஒருவரை போலி சாமியார் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாண பூஜை எனக் கூறி 7 மாதங்களாக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் : நாசிக்கில் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாசிக்கில் போலி சாமியார், பெண் ஒருவரை நிர்வாண பூஜை நடத்தி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து கந்துபூர் போலிஸாருக்கு புகார் வந்ததைத் தொடர்ந்து, போலி சாமியார் மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

போலி சாமியாரின் உதவியாளர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு முதலில் அறிமுகமாகியுள்ளனர். பின்னர் அவரிடம் சாமியார் சொல்வதை அப்படியே கேட்டால் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என ஆசையைத் துண்டியுள்ளனர்.

மேலும் பூஜை நடக்கும்போது, உங்கள் மனைவியின் ஆடைகளை முழுமையாகக் கழற்றி நிர்வாணமாக அமரவேண்டும் எனக் கூறியுள்ளனர். இதற்கு அப்பெண்ணின் கணவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பெண்ணை போலி சாமியார் முன் பூஜை என்ற பெயரில் நிர்வாணமாக அமர வைத்துள்ளனர். அப்போது சாமியார் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இப்படி சாமியார் அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் கடந்த ஏழு மாதங்களாக அந்த பெண்ணைத் தொடர்ந்து சாமியார் வன்கொடுமை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து அந்த போலி சாமியாரிடம் வேறு பெண்கள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories