இந்தியா

கொரோனா பாசிட்டிவ் வந்ததால் மன உளைச்சல்: தூக்கில் தொங்கிய தம்பதி - மங்களூருவில் பரிதாபம்!

கொரோனா பாசிட்டிவ் வந்ததால் மன உளைச்சல்: தூக்கில் தொங்கிய தம்பதி - மங்களூருவில் பரிதாபம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்று உறுதியானதால் மனமுடைந்த தம்பதிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று காலை கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே சுரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சித்ராப்புரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்துள்ளது.

இங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆர்யா சுவர்ணா. இவரது மனைவி குணா சுவர்ணா. இவர்களுக்கு திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆகிறது. குழந்தை ஏதும் இல்லை.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மனமுடைந்த இந்த தம்பதிகள் இன்று காலை முதலில் அவரது மனைவி குணா சுவர்ணா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு போன் செய்து தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சுரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories