இந்தியா

இப்போ மட்டும் எதுக்கு வந்தீங்க?.. ஒன்றிய அமைச்சர் காரில் சேற்றை வீசி எதிர்ப்பு : ம.பி மக்கள் ஆவேசம்!

வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற ஒன்றிய அமைச்சருக்கு மத்திய பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இப்போ மட்டும் எதுக்கு வந்தீங்க?.. ஒன்றிய அமைச்சர் காரில் சேற்றை வீசி எதிர்ப்பு : ம.பி மக்கள் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜூலை 28ம் தேதி முதல் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி கடுமையாகா பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஷோப்பூரில் ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பார்வையிட சென்றார்.

அப்போது, ஒன்றிய அமைச்சரின் காரை அப்பகுதி மக்கள் வழிமறித்து, வெள்ளச் சேதத்தைப் பார்வையிட விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் கறுப்புக் கொடி காட்டி அவரது காரில் சேற்றை வீசி போராட்டம் நடத்தினர்.

அப்போது, “அரசின் தவறான நிர்வாகத்தின் காரணத்தால்தான் அம்ரல் மற்றும் சீப் ஆற்றில் வெள்ள பாதிப்பு அதிகமானது. வெள்ளம் குறித்துச் சரியான நேரத்தில் மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு எச்சரிக்கவில்லை. வெள்ள நிவாரணமும் எங்களுக்குத் தாமதமாகவே வந்தது” என ஒன்றிய அமைச்சரிடம் மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஒன்றிய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ள பாதிப்பு குறித்துக் கணக்கெடுக்க ஷோப்பூரில் நான்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சரை வெள்ள சேத பாதிப்பு குறித்து பார்வையிடாமல் தடுத்து நிறுத்தியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் குவாலியர்-சம்பல் பிராந்தியத்தின் எட்டு மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories