தமிழ்நாடு

நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை... எதிர்க்கட்சித் தலைவராகும் உதயநிதி... - விவரம் உள்ளே!

நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை... எதிர்க்கட்சித் தலைவராகும் உதயநிதி... - விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தற்போது திமுக கூட்டணி ஆதரவோடு பெரும்பான்மையை நிரூபித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். மேலும் திமுக கூட்டணி 73 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது.

இந்த சூழலில் நாளை (மே 11) தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் நிலையில், மே 13-ம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறுகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக திமுக இளைஞரணி செயலாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமைக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை... எதிர்க்கட்சித் தலைவராகும் உதயநிதி... - விவரம் உள்ளே!

இதுகுறித்து தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு :-

கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 07-05-2026 மாலை 5.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில்,

* தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராக - உதயநிதி ஸ்டாலின் அவர்களும்,

* துணைத் தலைவராக - கே.என்.நேரு அவர்களும்,

* கொறடாவாக - எ.வ.வேலு அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories