தமிழ்நாடு

”மக்கள் கொடுத்திருக்கும் பொறுப்பு.. கடுமையாக உழைப்பேன்!” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன் என தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”மக்கள் கொடுத்திருக்கும் பொறுப்பு.. கடுமையாக உழைப்பேன்!” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!

கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.

என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!

banner

Related Stories

Related Stories