இந்தியா

“போலி வலைதளம் உருவாக்கி நன்கொடை வசூலித்த கும்பல்கள்” : புதிது புதிதாக வெளியாகும் ‘ராமர் கோயில்’ ஊழல்கள்!

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் பெயரில் போலி வலைதளத்தை உருவாக்கி அதன் மூலம் லட்சக்கணக்கில் நன்கொடை வசூலித்த 5 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

“போலி வலைதளம் உருவாக்கி நன்கொடை வசூலித்த கும்பல்கள்”
: புதிது புதிதாக வெளியாகும்  ‘ராமர் கோயில்’ ஊழல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த 2021 மார்ச் 18 அன்று, அயோத்தி ரயில்நிலையம் அருகே இருக்கும் 3 ஏக்கர் நிலத்தை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு வாங்கி, அதனை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு 18 கோடியே 50 லட்சத்திற்கு கைமாற்றிய விவகாரம் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அயோத்தி பா.ஜ.க மேயரின் மருமகன் ரவி மோகன் திவாரியும், சுல்தான் அன்சாரியும்தான் இந்த நில விற்பனையில் ஈடுபட்டவர்கள். குசும் பதக், ஹரீஷ் பதக் ஆகியோரிடமிருந்த நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய திவாரியும், அன்சாரியும், அடுத்த 5 நிமிடங்களில் அதே நிலத்தை ரூ. 18 கோடியே 50 லட்சத்திற்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தனர்.

இதில், அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு பெரும் தொகை கைமாறி இருப்பதாக என்று குற்றச்சாட்டு எழுந்திருப்பதுடன். இதுதொடர்பாக. உச்சநீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றுப்கோரிக்கை வலுத்து வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் துவங்கிய போது, கூடவே நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்களும் துவங்கிவிட்டன.

“போலி வலைதளம் உருவாக்கி நன்கொடை வசூலித்த கும்பல்கள்”
: புதிது புதிதாக வெளியாகும்  ‘ராமர் கோயில்’ ஊழல்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரத்தில், நரேந்திர ராணா என்பவர் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) பெயரில் அலுவலகம் திறந்து, ராமர் கோயில் பெயரில் பல லட்சங்களை சுருட்டினார். இதில் ஒருவர் கைது செய்யப்பட் டார்.

அடுத்ததாக, ராமர் கோவில் அறக்கட்டளை வங்கிக் கணக்கில் இருந்தே, ரூ. 6 லட்சத்தை, ஆசாமிகள் சிலர், கடந்த செப்டம்பர் மாதம் போலி காசோலை கொடுத்து கையாடல் செய்தனர். 2021 பிப்ரவரியில் மத்திய பிரதேச மாநிலம் போபால் அசோகா கார்டனில் வகிக்கும் மணீஷ் ராஜ்புத் என்பவர், அயோத்தி ராமர் கோயில் பெயரில் ‘ராம் ஜென்மபூமி சங்கல்ப் சொசைட்டி’ என்ற தனி அமைப்பையே உருவாக்கி பல லட்சங்களை நன்கொடையாக வசூலித்து மோசடியில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தான் நொய்டாவின் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்து கொண்டு, ராமர் கோயில் பெயரில் போலி வலைதளத்தை உருவாக்கி பல லட்சங்களை சுருட்டியதாக 5 பேரை போலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஏராளமான செல்போன்கள், லேப்டாப்கள், 50-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டை பிரதிகளையும் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ராமர் கோயிலுக்கு நிலம் வாங்கியதில், அறக்கட்டளை நிர்வாகிகளே பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories