இந்தியா

வெந்நீரை ஊற்றி, சிறுநீர் குடிக்க வைத்து 22 நாட்கள் இளம்பெண்ணை சித்திரவதை செய்த ‘கேரள சைக்கோ’ !

கேரளாவில் இளம்பெண்ணை 22 நாட்கள் கொடூரமாக சித்திரவதை செய்த சைக்கோ இளைஞரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வெந்நீரை ஊற்றி, சிறுநீர் குடிக்க வைத்து 22 நாட்கள் இளம்பெண்ணை சித்திரவதை செய்த ‘கேரள சைக்கோ’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மார்ட்டின் ஜோசப் என்ற இளைஞரும், கண்ணூரைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் கொச்சியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதையடுத்து, மார்ட்டினின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அந்த பெண், அவரிடமிருந்து விலகுவது என்று முடிவெடுத்துள்ளார். இதனை அறிந்த மார்ட்டின் அந்த பெண்ணை வீட்டிலேயே அடைத்துவைத்து யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரமாகச் சித்ரவதைகளைச் செய்துள்ளார்.

அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, உடலில் சூடு வைத்தும், வெந்நீர் ஊற்றியும், காயத்தின் மீது மிளகாய்ப் பொடி தூவி கொடுமைப்படுத்தியது மட்டுமில்லாமல், பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்து, சிறுநீர் குடிக்க வைத்து கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார் மார்டின்.

இப்படி 22 நாட்கள் அந்த சைக்கோவுடன் சிக்கித் தவித்த பெண், பிறகு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து தப்பிச் சென்று எர்ணாகுளம் காவல் நிலையத்தில், தனக்கு நேர்த் கொடுமையைத் தெரிவித்துள்ளார்.

வெந்நீரை ஊற்றி, சிறுநீர் குடிக்க வைத்து 22 நாட்கள் இளம்பெண்ணை சித்திரவதை செய்த ‘கேரள சைக்கோ’ !

இவரின் கதையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார், கொடூர சைக்கோ இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய முயன்றனர். இதனை அறிந்த மார்டின் முன் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போதும் போலிஸார் அவரை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

பின்னர் போலிஸார் கைது செய்துவிடுவார்கள் என அறிந்த மாட்டின் நண்பர்கள் உதவியுடன் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து போலிஸார் மார்ட்டினுக்கு உதவியதாக ஸ்ரீராக், ஜான் ஜாய் மற்றும் தனேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அதேநேரம் கடந்த 8ம் தேதி கக்கநாடு அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மார்ட்டின் தப்பிச்செல்வதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.

பின்னர், போலிஸாரின் மூன்று நாட்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு திருச்சூரில் உள்ள பெரம்ங்கலம் என்ற இடத்தில் சைக்கோ மார்டினை சுற்றி வளைத்து கைது செய்த கொச்சிக்கு அழைத்துச் சென்றனர். மேலும், மார்டின் ஏற்கனவே இதேபோன்று ஒரு பெண்ணை கொடுமைப்படுத்தியதாகவும் புகார் வந்துள்ளதால், கொடூர சைக்கோவுடன் போலிஸார் நடத்தும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories