இந்தியா

‘கொஞ்ச கொஞ்சமாக ஊசி போடுங்க; ரொம்ப நாள் வரும்’: மண்டை வீங்கித்தனமாக அறிவுரை கொடுத்த ஹரியானா பாஜக முதல்வர்

ஹரியானாவில் குறைந்த அளவிலேயே மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதால் எங்களிடம் கையிருப்பு உள்ளது என அம்மாநில முதல்வர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘கொஞ்ச கொஞ்சமாக ஊசி போடுங்க; ரொம்ப நாள் வரும்’: மண்டை வீங்கித்தனமாக அறிவுரை கொடுத்த ஹரியானா பாஜக முதல்வர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவியதை அடுத்து, மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் இந்திய மக்கள் தொகைக்கு ஏற்ப ஒன்றிய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்யாததால் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஒன்றிய அரசு விரைந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என மாநில முதல்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் கொரோனா தடுபபூசிகளை கொள்முல் செய்து மாநிலங்களுக்கு வழங்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரி கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் 11 மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் எவ்வளவு வேகமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்துகிறோமோ, அவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் முன்றாவது அலையில் இருந்து மக்களை நாம் பாதுகாக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறிவருகிறது.

‘கொஞ்ச கொஞ்சமாக ஊசி போடுங்க; ரொம்ப நாள் வரும்’: மண்டை வீங்கித்தனமாக அறிவுரை கொடுத்த ஹரியானா பாஜக முதல்வர்

இந்நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வேடிக்கையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அது என்னெவென்றால், “டெல்லி அரசு நாள்தோறும் 2 லட்சம் மக்களுக்கு தடுப்பூசிகளை விரைவாக செலுத்தியதால் அங்கு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஹரியானாவில் 50 முதல் 60 ஆயிரம் வரையே தடுப்பூசி செலுத்துகிறோம். அதனால், எங்களுக்கு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது” என அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், எங்களிடம் தடுப்பூசி இல்லை. உடனே ஒன்றிய அரசு தடுப்பூசிகளை கொடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும் என கூறியதற்குதான், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இப்படியான கருத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories