தமிழ்நாடு

“தமிழக நிதியமைச்சர் குழுவில் இல்லையா? - இந்த நேரத்தில் அரசியல் கூடாது”: ஒன்றிய அரசுக்கு குவியும் கண்டனம்!

மத்திய நிதியமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவில் தமிழகம் இடம்பெறாது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

“தமிழக நிதியமைச்சர் குழுவில் இல்லையா? - இந்த நேரத்தில் அரசியல் கூடாது”: ஒன்றிய அரசுக்கு குவியும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய நிதியமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவை உடனடியாக மாற்றியமைத்து குழுவில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை இடம் பெற செய்ய வேண்டும் என இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது பின்வருமாறு :-

மத்திய நிதியமைச்சகத்தில் இருந்து ஜி.எஸ்.டி வரி குறைப்போ அல்லது விலக்கோ கோவிட் சம்பந்தப்பட்ட மெடிக்கல் எக்ப்யூமெண்ட்டுக்கு கொடுப்பதற்காக 8 மாநிலத்தை சேர்ந்த ஒரு குழு அமைத்துள்ளனர். இது, மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இந்திய கூட்டமைப்பின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஏனென்றால் இந்த குழுவில் எட்டு மாநிலத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதாவது மேகாலாயா, குஜராத், மகாரஷ்டிரா, கோவா, ஒடிசா, கேரளா, தெலுங்கானா, உத்திரபிரசேதம் ஆகும். இந்த பிரச்சனையை ஜி.எஸ்.டி கவுன்சிலில் எழுப்பியது தமிழகத்தின் நிதியமைச்சர். நிறைய பேருக்கு சம்பளம் இல்லை, வருமானம் இல்லை, பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதில் அவர்கள் செலவை குறைப்பதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

“தமிழக நிதியமைச்சர் குழுவில் இல்லையா? - இந்த நேரத்தில் அரசியல் கூடாது”: ஒன்றிய அரசுக்கு குவியும் கண்டனம்!

இதில் சானிடைசர், சோப்புக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி உள்ளது. அதேபோன்று சர்ஜிக்கல் ரப்பர் கையுறைக்கு, வென்டிலேட்டருக்கு 12%, டிஸ்இன்பெக்சனுக்கு, தெர்மா மீட்டருக்கு 18% ஜி.எஸ்.டி உள்ளது. இவை அனைத்திற்கும் கொரோனா நோய் தாக்கம் இருக்கும் வரை விலக்கு கொடுக்க வேண்டும் என் முதன்முதலாக குரல் கொடுத்தது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தான்.

தமிழகம் தொழில்துறையில் அதிக ஜி.எஸ்.டியை ஈட்டித் தரும் மாநிலம். இந்த குழுவில் தமிழகம் இடம்பெறாது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த நேரத்தில் அரசியல் கூடாது. இது சாமானிய, எளிய மக்களுடைய வாழ்வாதார பிரச்சினை.

நோயில் இருந்து காப்பாற்ற தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வரக்கூடிய நேரத்தில் இது மத்திய அரசு நிச்சயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய யோசனை தான். எனவே இந்த குழுவை உடனடியாக மாற்றியமைத்து குழுவில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை இடம் பெற செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories