இந்தியா

மோடி தொகுதியிலேயே வெல்ல முடியாத பா.ஜ.க; உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி கொடி நாட்டிய சமாஜ்வாதி!

உத்திர பிரதேசத்தில் நடந்த கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியை சந்தித்துள்ளது.

மோடி தொகுதியிலேயே வெல்ல முடியாத பா.ஜ.க; உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி கொடி நாட்டிய சமாஜ்வாதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தில் அண்மையில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பல இடங்களில் ஆளும் பா.ஜ.க படுதோல்வியை சந்தித்துள்ளது.

அயோத்தி, மதுரா, வாரணாசி தொகுதிகளில் பா.ஜ.க கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதிலும் குறிப்பாக அயோத்தியில் 40 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி 24 இடங்களில் பெற்றி பெற்றுள்ளது.

அதேபோல் 33 இடங்களில் போட்டியிட்ட மதுராவில் 8 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதிக இடங்களை அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி வென்றுள்ளது. அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் பா.ஜ.க கடும் பின்னடையை சந்தித்துள்ளது.

மொத்தம் உள்ள 40 இடங்களில் சமாஜ்வாதி கட்சி 15 இடங்களில் பெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், கிராம பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க படு தோல்வியடைந்திருப்பது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், "பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் பா.ஜ.க மூழ்கும் கப்பல் என்பதைக் காட்டியுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க உத்திர பிரதேசத்தில் இருந்து அகற்றப்படும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories