இந்தியா

13,000 கோடி செலவில் பிரதமருக்கு புதிய இல்லம் கட்ட தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

புதிய நாடாளுமன்றம் கட்டம் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

13,000 கோடி செலவில் பிரதமருக்கு புதிய இல்லம் கட்ட தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமருக்கான நவீன வீடு, புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்தா கட்டுமானங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பலர் உயிரிழந்து வருகின்றனர். போதிய மருத்துவக் கட்டுமான வசதிகள் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள்.

நாடு கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு இந்த 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்ட்ரல் விஸ்தா திட்டங்களை செயல்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறது.

எனவே, அந்த திட்டங்களை இந்த நேரத்தில் செயல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதனை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று இன்று உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது வழக்கை விரைவில் விசாரணைக்கு பட்டியலிடுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா உறுதி அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories