இந்தியா

ஆக்சிஜன் கிடைக்காமல் கொத்து கொத்தாக மடியும் மக்கள்; பிரதமர் மோடிக்கோ புதிய சொகுசு இல்லம்!

புதிதாகக் கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமருக்கும் புதிய இல்லம் கட்டப்பட உள்ளது.

ஆக்சிஜன் கிடைக்காமல் கொத்து கொத்தாக மடியும் மக்கள்; பிரதமர் மோடிக்கோ புதிய சொகுசு இல்லம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றைக் கட்டுபடுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், அவை அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளது.

குறிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாக, இந்தியாவில் நோய்த்தொற்றைச் சமாளிக்க முடியாமல் மோடி அரசு திணறி வருகின்றது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் ஆக்சிஜன் பற்றக்குறைக் காரணமாக இந்தியாவில் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இந்தநிலை நீடித்தால் இந்தியா மிக மோசமான நிலையைச் சந்திக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தாத மோடி தலைமையிலா பா.ஜ.க அரசு புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதில் மட்டுமே தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. இந்நிலையில் புதிதாகக் கட்டப்பட உள்ள நாடாளுமன்ற வாளக கட்டிடத்தில் பிரதமருக்கான புதிய இல்லமும் கட்டப்பட இருப்பதாக மத்திய பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் கிடைக்காமல் கொத்து கொத்தாக மடியும் மக்கள்; பிரதமர் மோடிக்கோ புதிய சொகுசு இல்லம்!

இந்தியா முழுவதும் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் கொத்து கொத்தாக இறந்து வருகிறார்கள். மேலும் பல மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசிகளும் கிடைக்காமல் மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். நாடு இப்படி ஒரு நெருக்கடியைச் சந்தித்து வரும் இந்தியாவை இதிலிருந்து மீட்பதற்குப் பதில் உங்களுக்கு சொகுசு இல்லம் தேவைப்படுகிறதா? என பிரதமர் மோடியை அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories