சினிமா

குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!

BB வீட்டில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வரும் டாஸ்க் நடைபெறும் நிலையில் விக்ரம், சுபிக்க்ஷா ஆகியோரின் குடும்பத்தினர் வந்துள்ள காட்சிகள் இன்றைய promo-வில் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
S Ramya
Updated on

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கி 81 நாட்களை எட்டிவிட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 20 போட்டியாளர்களும் wild card entry-யாக 5 போட்டியாளர்கள் என மொத்தம் 25 போட்டியாளர்களுடன் நடைபெற்றுவந்த இந்த நிகழ்ச்சியில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, துஷார், பிரவீன், கலையரசன், watermelon star திவாகர், கெமி, பிரஜின் ஆகியோர் வெளியேறி இருந்தனர். அதே போல போன வார இறுதியில் FJ மற்றும் ஆதிரை ஆகிய இருவரும் வெளியேறினர். இதில் ஆதிரை இரண்டவது முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துவிட்டு வெளியேறிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் freeze task-ல் 24 மணிநேரம் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பதற்கான சலுகையை பெற்றிருந்த ஆதிரை, டஸ்கிற்கு முன்னரே வெளியேறியதால் விஜய்சேதுபதியின் எபிசோடில் ஆதிரையின் குடும்பத்தினர் அழைத்துவர பட்டிருந்தனர். மேலும் தனக்கு கிடைத்த சலுகையை பாருவிற்கு வழங்கிவிட்டு சென்றார் ஆதிரை.

இதனை தொடந்து, பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற captaincy task-ல் கமருதீன் வெற்றி பெற்று இந்த வார "வீட்டு தல"-யாக தேர்வாகி இருந்தார். எனினும் தான் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் என்பதை மறந்து விட்டு, பாருவுடன் வலம்வருவதிலேயே கவனம் செலுத்தி வந்தார். இதில், பாரு மற்றும் கமருதீன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. பாரு தனது குடும்பத்தினரை அழைத்து வந்து கமருவுடனான நட்பு குறித்து பேசி புரிய வைக்க வேண்டும் என்று தீவிரமாக கூறிவந்தார். இதனிடையே, "நம்ம ரிலேஷன்ஷிப் வெளியே செட் ஆகலைன்னாலும்... இது ஒரு document என்று கமருவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. இதனால் கோவம் ஆன கமரு, "என் angle-ல ஒரு நிமிஷமாச்சும் நீ யோசிச்சிருக்கியா.. எப்பவும் உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கற" என்று கேள்வி எழுப்பினார். மேலும், "என் family என்ன சொல்வாங்கன்னு தெரியலையே" என்று கூறிய கமருவிடம் பயப்படறியா குமாரு? என்று நக்கல் செய்தார் பாரு. எனினும் தனது பொழப்பத்தை மீண்டும் தொடங்கிய பாரு, ''எங்க அம்மா என்ன நினைக்கறாங்கன்னு எனக்குத் தெரியணும்!" என்று கூற பண்றதையெல்லாம் பண்ணிட்டு… ஏன் இவ்ளோ பயப்படற… எதுவா இருந்தாலும் உன் கூட நிப்பேன் என்று கூறி விவாதத்தை முடிக்க முயன்றார் கமரு.

குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!

எனினும் இந்த விவாதம் முடிந்த பாடு இல்லை. திவாகரிடம் கமருதீன் தன்னை bad touch பண்ணதாக பாரு கூறியதை குறித்து அமித் மற்றும் வினோத்திடம் புலம்பி கொண்டு இருந்தார் கமரு. இந்த bad touch விவாதத்தையும் ஆரம்பித்தது பாருதான். "பார்வதி ஸ்வீட் girl கிடையாது. அடிக்கடி சுருக்குன்னு பேசுவாங்க" என்று தனது கருத்தை கூறினார் அமித். இந்த பிரச்சைக்குள் சாண்ட்ராவையும், திவ்யாவையும் இழுத்து விட்டார் கமரு. "பாரு பண்றதையெல்லாம் நீ நம்பறியா... என்று சாண்ட்ராவிடம் கேட்ட திவ்யா... Bad touch-பண்ணா அப்போவே சப்புன்னு அறைய வேண்டியதுதான.. ஆனா day full -ஆ உரசிக்கிட்டுதானே இருந்தா? அவ கமருக்கு கெட்டபேர் குடுத்து வெளியே அனுப்ப plan பண்ணுறா, Very dangerous girl" என்று கூறினார் திவ்யா.

இதையடுத்து அரோராவிடம் சென்ற கமருவுக்கு, "நீ என்கிட்ட gentelman-ஆ தான் நடந்திருக்க. உனக்கு ஓட்டு வர கூடாதுனு பாரு இப்படில்லாம் பண்றா" என்று தன் பங்கிற்கு கருத்து கூறினார் அரோரா. இறுதியில், "யப்பா.. சாமி.. உன் மேல தப்பே இல்ல. நான்தான் தெரியாம சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோ" என்று கமருவிடம் surrender ஆகி இந்த பிரச்னையை முடித்து வைத்தார் பாரு.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான nomination process நடைபெற்றது. இதில், கனி, சபரி, திவ்யா, வினோத், அமித், சுபிக்ஷா, அரோரா, சான்ட்ரா, விக்ரம் மற்றும் வழக்கம் போல பாருவும் nominate ஆகியுள்ளனர். மேலும் இந்த வாரத்திற்கான "வீட்டு தல" யாரு? mic ஒழுங்கா போடவேண்டியது யாரு? என்று நக்கல் செய்து கமருவுக்கு அவரது கடமைகளை நினைவு படுத்தினார் பிக்பாஸ்.

குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!

இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இந்த சீசனின் freeze task தொடங்கியது. ஆனால் இந்த முறை யாருடைய குடும்பத்தினர் வருகிறார்ளோ, அவர்களை பார்த்தவுடன் போட்டியாளர்கள் activity area-விற்கு சென்று டாஸ்க் செய்ய வேண்டும். டாஸ்கை முடித்த பின்னர்தான் குடும்பத்தினரை சந்திக்க முடியும் என்று கூறி செக் வைத்தார் பிக்பாஸ். இதில் முதலாவதாக "ஆராராரிரோ கேட்குதம்மா" என்ற பாடல் ஒலிக்க பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது சாண்ட்ராவின் குடும்பம். இவர்களை கண்டதும் பதற்றமான சாண்ட்ரா அவசர அவசரமாக டாஸ்கை முடித்துவிட்டு கணவர்(சீசன் 9 முன்னாள் போட்டியாளர்) ப்ரஜின் மற்றும் இரு மகள்களையும் கட்டிப்பிடித்து கதறியழுதார். "உன் கேமை நீ ஆடு... கெத்தா ஆடின சாண்ட்ரா இப்ப இல்லை... அந்த gap-ல நிறைய பேர் மேல போயிட்டாங்க... எல்லார் கிட்டயும் பழகு... மத்தவங்களை கவனி... ஜாலியா இரு...." என பலவிதமான கருத்துக்களை சாண்ட்ராவிடம் கூறினார் ப்ரஜின்.

இதையடுத்தது, "கன்னத்தில் முத்தமிட்டால்" பாடல் ஒலிக்க பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது, கனியின் குடும்பத்தினர். தன் மகள்கள் வந்ததை பார்த்து விம்மி அழுத கனி வேகமாக சென்று டாஸ்க் செய்து விட்டு வந்தார். தனது மகள்களுடன் பேசிக்கொண்டிருந்த கனிக்கு surprise கொடுத்த பிக்பாஸ் அவரது தங்கை விஜியை(முன்னாள் போட்டியாளர்) பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். . "நல்லா பண்ற… super-ஆ பண்ற… ஆனா relationship-ல மாட்டிக்குற... அது உனக்கே தெரியுது... நீ 1 hour episode-ல வரவே மாடிக்குற... entertainment தான் முக்கியம்... அதுக்காக fake-ஆ இருக்க வேண்டாம்... மேலும், சாண்ட்ரா மன்னிப்பு கேக்கறாங்க... நீ எழுந்து நிக்கறே... நீ தப்பு பண்ண மாதிரி தெரியுது… இவுங்க எல்லாரையும் நீ left hand-ல deal பண்ணனும்…" என கனியை தெளிவாக குழப்பிவிட்டார் விஜி.

குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!

கனியின் குடும்பத்தினர் வந்து சென்ற பிறகு, பிக்பாஸ் வீட்டிற்குள் சபரியின் குடும்பம் வந்தது. பந்துகளை வைத்து வழங்கப்பட்ட டாஸ்கை வேக வேகமாக முடித்துவிட்டு வந்த சபரிக்கு, "தப்புன்னு தெரிஞ்சா அந்த இடத்துலேயே பேசு… வேட்டி கட்டாத… hero மாதிரி dress பண்ணு… என கூறி சபரியை உற்சாகப்படுத்தினார். மேலும், சபரி மற்றும் அவரது அக்கவுடனான பிணைப்பு பற்றி பாடல் பாடிய வினோத், சபரிக்கு அவரது அக்கா அடுத்த பிறவியில் அம்மாவா இருக்கனும் என்று கூறி அனைவரையும் கண் கலங்க வைத்தார்.

இதையடுத்து, "உனக்காக பொறந்தேனே… எனதழகா" என்ற பாடல் ஒலிக்க பிக்பாஸ் வீட்டிற்குள் வினோத்தின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் வந்து இருந்தனர். பாக்யா மற்றும் வினோத் உரையாடல் தொடங்கியது. "பாராட்டும் போது குதிக்கிறல... அதே போல மத்தவங்க பேசும்போதும் கவனி என்று பாக்கிய வினோத்திற்கு சொன்னது சிறப்பு… trigger ஆகாத… கோவப்படாம இரு… ஒரேயொரு BGM போதும்… நீ பண்ணுறதையெல்லாம் மாத்திடுவாங்க என்று கூறி வினோத்தை warning செய்தார் பாக்கியா.

குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!

அடுத்ததாக அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி மற்றும் அவரது மகள் வேதா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். வினோத்தைப் பார்த்து நன்றி தெரிவித்த அமித்தின் மனைவி, "அவருக்கு அதிகமா friends இல்லை, உங்க நட்பு சிறப்பா இருக்கு" என்று பாராட்டினார். மேலும் தனது கணவரிடம் "எல்லோர் கூடயும் பழகு... பேசு... அப்போதான் முழுசா ஒரு view கிடைக்கும்... என்று கூறிய ஸ்ரீரஞ்சனி, மத்தவங்களுக்கு ஆறுதல் சொல்ல நீ இங்க வரலை... மைக் நழுவறது எனக்கே தெரியும்போது அவுங்களுக்கு தெரியாதா... நல்லாவே தெரியும்" என்று கூறினார். மேலும், "பாருவிற்கு கேம் தான் முக்கியம் அதுக்காக என்ன வேணா பண்ணுவா" என்று கூறியதுடன் "சாண்ட்ராவும் சும்மா இல்ல, பாருவையே manipulate பண்ணுறாங்க" என்று தனது கணவரை எச்சரித்தார்.

அமித்தின் குடும்பம் சென்ற பிறகு, அடுத்ததாக வீட்டிற்குள் வந்தது திவ்யாவின் குடும்பம் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது. "நல்லா விளையாடுற... அப்படியே இரு... மத்தவங்க trigger பண்ணுவாங்க அதான் game" என்று திவ்யாவுக்கு குடும்பத்தினரால் உபதேசம் செய்யப்பட்டது. சாண்ட்ராவிடம் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லி warningயும் வழங்கப்பட்டது.

குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!

இதையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் christmas கொண்டாட்டம் நடைபெற்றது. christmas தாத்தா வேடம் அணிந்த நபர் வந்து போட்டியாளர்களுடன் நடனமாடி பரிசளித்து சென்றார். இதனை தொடர்ந்து "ஆராரிராரோ" பாடல் ஒலிக்க பிக்பாஸ் வீட்டிற்குள் பாருவின் அம்மா சரஸ்வதி வந்தார். பாரு - கமருதீன் குறித்து அம்மா என்ன சொல்லுவார் என்ற பதற்றத்துடன் பாரு இருக்க, பாருவின் அம்மா நிதானத்துடன் கையாண்டார். மேலும், "வாப்பா கம்ருதீன்.. நீ தொழில்ல நல்லா வரணும்... ஹீரோவா வரணும்" என்று கமருதீனையும் வாழ்த்தினார் பாருவின் அம்மா. பாருவின் அம்மா வருகையால் ஏதேனும் பிரளயம் வெடிக்கும் என்று எதிர்பார்த்த அனைவருக்குமே ஏமாற்றமாகத்தான் அமைந்தது.

குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!

இதனிடையே, அரோரா தன்னை சந்திக்க தனது தோழி ரியாகூட(முன்னாள் போட்டியாளர்) வரமாட்டாரோ என்ற கவலையில் மூழ்கினார். அப்பொழுது, "நட்புக்கு வயதில்லை" என்ற பாடல் ஒலிக்க ரியாவும், அரோராவின் நண்பர் சாஜியும் வீட்டிற்குள் வந்தனர். உள்ளே வந்த ரியா அரோராவின் துஷார் நாடகத்தை வெளிப்படையாக போட்டு உடைத்தார். "நீ துஷாரை லவ் பண்றியா... இல்லையா... எப்பப்பாரு துஷார்.. துஷார்… ன்னு இம்சை பண்ணுற… எதுனாலும் வெளியே வந்து பாத்துக்கலாம்" என்று கூறி அரோராவின் துஷார் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரியா. மேலும் பாருதான் triangle-அ முடிச்சு வைச்சா.. இப்போதான் நீ game நல்லா விளையாடுற என்று கூறிய ரியா.. பாருவுக்கு உன்னைய வெளியில அனுப்பனும்... உனக்கு பாருவ அனுப்பணும்னு இருக்கு என்று அரோரா மனதில் இருந்த அனைத்தையும் வெளியப்படையாக போட்டுடைத்தார் ரியா.

ரியா வந்து சென்ற பின்னர், அடுத்ததாக வீட்டிற்குள் வந்தது கமருதீனின் நண்பர் கெளதம் மற்றும் கமருதீன் அக்காவும் அவரது மகளும். கமருவின் அக்காவை "வாங்க அக்கா" என்று பாரு அன்பாக அழைக்க பதிலுக்கு அவரும் தங்கச்சி என்று கூறி சிரித்துக்கொண்டே சென்றார். மேலும் கமருவின் வார்த்தை பிரயோகத்தை சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளும்படி அவரது அக்காவும் நண்பரும் அறிவுரை கூறினர். அத்துடன் கமருவை தனியாக அழைத்துச்சென்ற நண்பர், " உனக்கு family audience வேண்டாமா... camera இருக்கறத மறந்துட்டியா" என்று கேள்வி எழுப்பினார். மேலும், "நம்ம வீட்லயும் குழந்தைங்க பாக்குறாங்க" வெளில இருந்தும் இத சொல்ல சொல்லி அனுப்பினாங்க என்று கமருவின் அக்காவும் சுட்டிக்காட்டி இருந்தார். அத்துடன் கமரு - வினோத்தின் நடிப்பு நன்றாக உள்ளது என்று கூறிய நண்பர் கெளதம் இருவரும் ticket to finale வர தகுதியுள்ளவர்கள், அரோராவின் பேச்சை முழுவதுமாக நம்ப வேண்டாம் போன்று வினோத் மற்றும் கமருவுக்கு அறிவுரை கூறினார்.

குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!

அடுத்ததாக பார்வதியையும் தனியாக அழைத்து பேசிய கமருவின் நண்பர் கெளதம், நான் கமருவோட family-ஆ இருந்து இருந்தா.. உங்க பக்கமே வந்துருக்க மாட்டேன். இந்த relationship என்னவா வேணா இருக்கட்டும். வெளில வந்து பார்த்துக்கலாம். ரெண்டு பேரும் தனி தனியா game ஆடுங்க. இது குழந்தைங்க பார்க்கற show ” என்று அறிவுரைகூறிவிட்டு சென்றார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினர் நண்பர்கள் என்று வந்து செல்லும் நிலையில் அடுத்ததாக விக்ரமின், சுபிக்க்ஷா ஆகியோரின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து செல்லும் காட்சிகள் இன்றைய promo-வில் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தினரின் அறிவுரைகளால் சில போட்டியாளர்கள் குழப்பத்திலும், சிலர் தெளிவான மன நிலையிலும் பிக்பாஸ் வீட்டிற்குள் வளம் வரும் நிலையில் இனி வரும் நாட்கள் பிக்பாஸ் வீட்டில் என்னென்ன களோபரம் வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் இடையே அதிகரிக்க செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories