முரசொலி தலையங்கம்

“நாடாளுமன்றத்தில் தமிழ் முழக்கம் - தாய்மொழிக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு MP-க்கள்” - முரசொலி புகழாரம்!

தமிழ்க்குரலை, தமிழ்நாட்டுக் குரலை நாடாளுமன்றம் கேட்பதற்குக் காரணம், இக்குரலுக்கான அரசியல் சக்திகள் தமிழ்நாட்டில் இருந்து முழுமையாக வென்று சென்றதுதான் காரணம்.

“நாடாளுமன்றத்தில் தமிழ் முழக்கம் - தாய்மொழிக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு MP-க்கள்” - முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“தெருவெல்லாம் தமிழ் முழக்கம்” என்று சொல்வதைப் போல நாடாளுமன்றத்தில் இம்முறை தமிழ் முழக்கம் அதிகமாக ஒலித்துள்ளது.

நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத் தொடரில், நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக, மக்களவை உறுப்பினர்களின் 160 உரைகள் அவர்களின் தாய்மொழியிலேயே ஒலித்துள்ளது. இதில் 50 உரைகள் தமிழில் நிகழ்த்தப்பட்டு உள்ளன என்ற தகவல், தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தரும் தகவல், ஆகும். இவற்றின் வாயிலாக, மற்ற மாநில மொழி முந்தி, நம் தமிழ் மொழி முதலிடம் பிடித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்தி, ஆங்கிலம் என இரு மொழிகள் மட்டுமே பேச முடியும். இந்த மொழிகள் தெரியாதவர்கள், தாய்மொழிகளில் பேச முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில், “மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும், மொழிகளில் பேசுவதற்கு அனுமதி தர வேண்டும்” என்ற கோரிக்கை எழுந்தது. இக்கோரிக்கை ஏற்கப்பட்டு மொழி பெயர்ப்பாளர்கள் சமீப காலமாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

“நாடாளுமன்றத்தில் தமிழ் முழக்கம் - தாய்மொழிக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு MP-க்கள்” - முரசொலி புகழாரம்!

2023 ஆம் ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரில், மக்களவை நடவடிக்கைகளில், ஒவ்வொரு நாளும் கேள்வி நேரத்தின் போது மட்டும், மொழிபெயர்ப்பு முயற்சி துவங்கப்பட்டது. பின்னர் அனைத்து நடவடிக்கைகளையும் மொழிபெயர்க்கத் திட்டமிடப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில், அலுவல் மொழிகளாக அதிகாரப்பூர்வமாக, 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 22 மொழிகளிலும், மக்களவை நடவடிக்கைகள் மொழி பெயர்க்கப்படும் சூழல் உருவானது. இதற்காக மொத்தம் 84 மொழி பெயர்ப்பாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இதனால் இந்தி, ஆங்கிலத்துக்கு மட்டுமே இருந்த மொழிபெயர்ப்பு வசதி, அனைத்து மொழிகளுக்கும் கிடைத்தது.

மக்களவை அலுவல் பட்டியலும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கடந்த ஆண்டு முதல் வெளியாகி வருகிறது. மொத்தம் பத்து மொழிகளில் இது கிடைக்கிறது.

இதனால் ஆங்கிலம், இந்தி தவிர மற்ற மாநில மொழிகள் ஒலிக்க வாய்ப்பு ஏற்பட்டது. பல்வேறு மொழிகளில் மொத்தம் 160 உரைகள் இந்தக் கூட்டத்தொடரில் மக்களவை உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளன. இவற்றில், 50 உரைகள் தமிழில் நிகழ்த்தப்பட்டன. 43 உரைகள் மராத்தியில் பேசப்பட்டுள்ளன. வங்க மொழியில் 25 உரைகள் இடம்பெற்றுள்ளன.

2019, 2024 ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் முழுமையாக திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் வெற்றி பெற்றுச் சென்றுள்ளனர். 2019 தேர்தலில் ஒரு தொகுதியில் அ.தி.மு.க. வென்றது. இம்முறை அதுவும் இல்லை. மொத்தமாக தி.மு.க. கூட்டணியே கைப்பற்றியது. எனவேதான் தமிழ் முழக்கம் அதிகம் ஒலித்தது.

“நாடாளுமன்றத்தில் தமிழ் முழக்கம் - தாய்மொழிக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு MP-க்கள்” - முரசொலி புகழாரம்!

தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் போதே, “தமிழ் வாழ்க, தமிழ்நாடு வாழ்க, பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க, மார்க்ஸ் வாழ்க, அம்பேத்கர் வாழ்க” என்று முழங்கிய காட்சிகளையும் பார்த்தோம். இதனை வட மாநில உறுப்பினர்கள் அதிர்ச்சியோடு நோக்கியதையும் பார்த்தோம். ‘தமிழ் வாழ்க’ என்று முழங்கிய நமது உறுப்பினர்கள், இப்போது தமிழிலேயே அதிகம் பேசி தங்கள் கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். இது தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

‘நாங்கள்தான் ஏற்பாடு செய்து தந்தோம்’ என்று பா.ஜ.க. தரப்பு சொல்லலாம். அதற்கான ஏற்பாடு செய்துதரக் கூடிய நெருக்கடி எதனால் வந்தது? மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தர வைத்தவர்கள் யார்? இந்த மாநிலங்களில் இருந்து சென்ற உறுப்பினர்களால்தான் இதற்கு மக்களவைத் தலைவர் ஒப்புக்கொண்டார் என்பதே முழு உண்மை.

“நாடாளுமன்ற நடவடிக்கைகள் இந்த அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்” என்று அரசமைப்புச் சட்டத்தின் 120 ஆவது பிரிவு கூறுகிறது. ‘இந்தி அல்லது ஆங்கிலத்தில் போதுமான அளவுக்கு நன்கு பேச முடியாதவர்கள், அவர்களின் தாய்மொழியில் அவர்கள் தலைவரின் அனுமதியைப் பெற்று பேசலாம்’ என்றும் அந்தப் பிரிவு சொல்கிறது. ‘இந்தி, ஆங்கிலத்தில் பேச முடியாதவர்கள்’ என்ற வரையறையே தவறானது. இது வேறு வழியில்லாமல் தரப்பட்ட வாய்ப்பு ஆகும். அப்படி இருக்கக் கூடாது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பேசுவதற்கான மொழி உரிமையை வழங்க வேண்டும் என்பதை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் அலுவல் மொழிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. 38 மொழிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் மொழியையும் இந்தப் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியையும், ஆங்கிலத்தையும் மட்டுமே வைத்துக் கொள்வது மிக மோசமான மொழித் தடுப்பு ஆகும்.

“நாடாளுமன்றத்தில் தமிழ் முழக்கம் - தாய்மொழிக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு MP-க்கள்” - முரசொலி புகழாரம்!

மேலும், 2014 பா.ஜ.க. ஆட்சிக்குப் பிறகு ஆங்கிலப் புறக்கணிப்பு திட்டமிட்டு நடந்தது. அனைவருக்கும் புரியும் வகையில் ஆங்கிலம் பேசுவதை, ஆங்கிலத்தில் பதில் அளிப்பதை தவிர்த்து இந்தியிலேயே பதில் சொல்வதை, இந்தியாவில் அதிகம் பேசுவதைச் செய்து வருகிறார்கள். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும், இந்தியில் பதில் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தித் தாக்குதலை தொடர்ந்து பா.ஜ.க. செய்து வருவதைத்தான் இந்தப் பத்து ஆண்டுகளாகப் பார்க்கிறோம். ‘நாங்கள் எங்கள் மொழியில் பேசுகிறோம், நீங்கள் உங்கள் மொழியில் பேசிக் கொள்ளுங்கள்’ என்று அவர்கள் இறங்கி வந்துள்ளனர்.

தமிழ்க்குரலை, தமிழ்நாட்டுக் குரலை நாடாளுமன்றம் கேட்பதற்குக் காரணம், இக்குரலுக்கான அரசியல் சக்திகள் தமிழ்நாட்டில் இருந்து முழுமையாக வென்று சென்றதுதான் காரணம். தி.மு.க. கூட்டணியானது “நாற்பதுக்கு நாற்பது” வென்றது தான் இதற்குக் காரணம். இத்தகைய முழுமையான, தொடர்ச்சியான வெற்றிகள் மூலமாகத்தான் தமிழர்தம் அரசியல் ஒழுங்காக ஒலிக்க முடியும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலமாக இதனைத் தடுக்க, குறைக்கப் பார்ப்பார்கள். அதனையும் எச்சரிக்கையுடன் தடுக்க வேண்டும்.

தமிழ் வாழ்க! தமிழ் எங்கும் ஒலிக்கட்டும்!

banner

Related Stories

Related Stories