இந்தியா

"இந்திய மக்களே திண்டாடும்போது, வெளிநாட்டு ஏற்றுமதி அவசியமா?” - பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவும் சூழலில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சரியா என காங். எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

"இந்திய மக்களே திண்டாடும்போது, வெளிநாட்டு ஏற்றுமதி அவசியமா?” - பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. சமீப சில நாட்களாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி மருந்துகள் இருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என பா.ஜ.க அரசு கூறி வருகிறது.

கொரோனா தடுப்பூசி தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே, நேற்று மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தின்போது, ஏப்ரல் 11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “கொரோனா காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவது என்பது தீவிரமான பிரச்சினை. இதை கொண்டாட்டமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

மாநிலங்களுக்கு இடையே எந்தவிதமான வேறுபாடும் காட்டாமல், கொரோனா தடுப்பூசியை போதுமான அளவில் வழங்கி மத்திய அரசு உதவ வேண்டும்.

கொரோனா பரவலால் நம் நாட்டு மக்கள் உயிர்பயத்தால் அச்சத்துடன் இருக்கும்போது, தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது என்பது சரியான நடைமுறையா? நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடி அதைத் தோற்கடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories