இந்தியா

“பொய் வாக்குறுதிகளை கூறி பாஜகவினர் வந்தால் பாத்திரத்தாலேயே அடித்து விரட்டுங்கள்” - மம்தா பானர்ஜி பேச்சு!

ஓட்டு கேட்டு வந்தால், வீட்டிலுள்ள பாத்திரங்களாலேயே அடித்து விரட்டுங்கள் என பா.ஜ.கவை விமர்சனம் செய்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

“பொய் வாக்குறுதிகளை கூறி பாஜகவினர் வந்தால் பாத்திரத்தாலேயே அடித்து விரட்டுங்கள்” - மம்தா பானர்ஜி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்கத்தில் வருகிற 27ம் தேதியிலிருந்து 8 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகிறது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

அதேபோல், மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, மத கலவரத்தை தூண்டிவிடுவது போன்ற அராஜகத்தில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பாங்குரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி, அரிசி, பருப்பு தருவோம் என பா.ஜ.க பொய்யான வாக்குறுதிகளை அளித்து, உங்களின் வாக்குகளை வாங்கி சென்று விடுவார்கள் என பா.ஜ.க மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார்.

“பொய் வாக்குறுதிகளை கூறி பாஜகவினர் வந்தால் பாத்திரத்தாலேயே அடித்து விரட்டுங்கள்” - மம்தா பானர்ஜி பேச்சு!

மேற்குவங்க மாநிலம், பாங்குரா நகரில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு மம்தா பானர்ஜி பேசுகையில், “கடந்த தேர்தலின் போது, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என பா.ஜ.க தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் பணம் வந்து சேர்ந்ததா?. அதேபோலத்தான், தேர்தலின்போது அரிசி, பருப்பு தருவோம் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்துக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத அந்நிய கட்சி பா.ஜ.க. இங்கு குண்டர்கள் மூலம் வன்முறையைத் தூண்டவும் திட்டமிட்டுள்ளனர். எனவே பா.ஜ.வினர் வாக்கு கேட்டு உங்களை மிரட்ட முயன்றால், வீட்டிலுள்ள பாத்திரங்களைக் கொண்டே அவர்களை அடித்து விரட்டுங்கள்.

பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்றும், என்ன சாப்பிட வேண்டும் என்றும் நமக்குப் பாடம் நடத்துகிறார்கள். அம்பேத்கரை விட மிகப்பெரிய தலைவராக மோடியை முன் நிறுத்த முயல்கிறார்கள். குஜராத்திலுள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் எப்படி மோடியின் பெயருக்கு மாற்றப்பட்டது என்பதை பார்த்தோம். இதேபோல் ஒரு நாள் இந்த நாட்டின் பெயரையே மோடிக்குச் சூட்டவும் செய்வார்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories