இந்தியா

“மேற்கு வங்கத்தை பா.ஜ.க ஆளுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” : மம்தா பானர்ஜி ஆவேசம்!

உலகளவில் கொள்ளை அடிப்பதில் வல்லமை பெற்ற கட்சி பா.ஜ.கதான்; அந்த கட்சி மேற்கு வங்கத்தை ஆளுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

“மேற்கு வங்கத்தை பா.ஜ.க ஆளுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” : மம்தா பானர்ஜி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்கத்தில் வருகிற 27ம் தேதியிலிருந்து 8 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகிறது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

அதேபோல், மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, மத கலவரத்தை தூண்டிவிடுவது போன்ற அராஜகத்தில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி என உள்ளிட்ட பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் பலரும் மேற்கு வங்கத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹால்டியாவில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, உலகிலேயே கொள்ளை அடிப்பதில் பெரும் வல்லமை பெற்ற கட்சி பா.ஜ.கதான் என கடுமையாக சாடினார்.

“மேற்கு வங்கத்தை பா.ஜ.க ஆளுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” : மம்தா பானர்ஜி ஆவேசம்!

மேலும் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே தீர்வு. மக்களைக் கொல்வதற்குக் கலவரத்தை உருவாக்கும் பா.ஜ.கவை ஒரு போதும் மேற்கு வங்கத்தை ஆளுவதற்கு அனுமதிக்க மாட்டோம். உலகிலேயே கொள்ளை அடிப்பதில் பெரும் வல்லமை பெற்ற கட்சி பா.ஜ.கதான்.

தேர்தலை ஜனநாயக முறைப்படி அந்த கட்சி சந்திப்பதில்லை. அச்சுறுத்தலின் மூலம் மட்டுமே பா.ஜ.க வளர்ச்சியடைகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்திய பொருளாதாரத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ரயில்வே, பி.எஸ்.என்.எல், காப்பீடு நிறுவனங்கள், வங்கிகள் என எல்லாவற்றையும் விற்று வருகிறார். மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்டியா கப்பல் துறைமுகத்தையும் மோடி ஒருநாள் விற்று விடுவார். இதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories