இந்தியா

பெற்ற தாயை தாக்கிவிட்டு எதிர்க்கட்சியினர் மீது பழி போட்ட பா.ஜ.க நிர்வாகி : அம்பலமான அரசியல் நாடகம்!

சொந்த தாயை தாக்கிவிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் மீது பழிபோட முயன்ற பா.ஜ.க நிர்வாகியின் செயல் மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பெற்ற தாயை தாக்கிவிட்டு எதிர்க்கட்சியினர் மீது பழி போட்ட பா.ஜ.க நிர்வாகி : அம்பலமான அரசியல் நாடகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்குவங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபால் மஜும்தார். இவரது தாயார் ஷோவா மஜும்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முகமூடி அணிந்த மூன்று நபர்கள் வீட்டிற்குள் புகுந்து இவர்களைத் தாக்கியுள்ளனர். இது குறித்து கோபால் மஜும்தார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

பின்னர், இந்த தாக்குதல் குறித்து கோபால் மஜும்தார் கூறுகையில், முகமூடி அணிந்த மூன்று நபர்கள் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர், அப்போது அவர்கள் 'நீ எதற்கு பா.ஜ.கவில் இருக்கிறாய்' என கூறி கடுமையான வார்த்தைகளால் என்னை திட்டினர். இதனால் எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்த்தவர்கள்தான் என்று தெரிவித்தார். மேலும், 85 வயதாகும் ஷோவா மஜும்தார், "எனது மகன் பா.ஜ.க நிர்வாகியாக இருப்பதால் தாக்கப்பட்டுள்ளார். நான் படுத்திருக்கும்போது, இரண்டு நபர்கள். என்னையும் தாக்கினர்" என்று கூறினார்.

இதையடுத்து மூதாட்டி மீது வீடுபுகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் மீடு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.கவினர் வலியுறுத்தி வந்தனர்.

 பெற்ற தாயை தாக்கிவிட்டு எதிர்க்கட்சியினர் மீது பழி போட்ட பா.ஜ.க நிர்வாகி : அம்பலமான அரசியல் நாடகம்!

இந்நிலையில், இந்த தாக்குதல் நடத்தியவர்கள் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள்தான் என ஷோவா மஜும்தாரின் பேரன் கோபிண்டோ கூறியது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிண்டோ கூறுகையில், "பாட்டி நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்து. கோபால் தன்னை அடிப்பதாகவும் பல முறை என்னிடம் கூறியிருக்கிறார். இந்த தாக்குதலுக்குப் பின்னால் பா.ஜ.க இருக்கலாம்" என தெரிவித்தார்.

அதேபோல், "தனது மகன் கோபால் தன்னை அடித்து துன்புறுத்துவதாக ஷோவா மஜும்தார் புலம்புவார், கடைசியாக அவரை சந்தித்தபோது பாட்டியின் முகம் வீங்கியிருந்தது" என கோபால் வீட்டின் அருகே வசித்து வரும் ப்ரோமிதா தெரிவித்துள்ளார். இதன்மூலம், பா.ஜ.க நிர்வாகியான கோபால் மஜும்தார் வேண்டுமென்றே திரிணாமுல் காங்கிரஸ் மீது பழியைப் போடுவதற்காக தாக்குதல் நாடகம் நடத்தியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories