இந்தியா

இப்படியும் கூச்சமில்லாமல் பொய் சொல்ல முடியுமா? : இந்தியர்களை வியப்பில் ஆழ்த்தும் அமைச்சர் நிதின் கட்கரி!

“பாஸ்டேக் முறையால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும்” என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

இப்படியும் கூச்சமில்லாமல் பொய் சொல்ல முடியுமா? : இந்தியர்களை வியப்பில் ஆழ்த்தும் அமைச்சர் நிதின் கட்கரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசனை குறைப்பதற்காக, கடந்த 2016ம் ஆண்டு ‘பாஸ்டேக்’ முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் முறையை கடந்த கடந்த 15ம் தேதி நள்ளிரவில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் நடைமுறைப்படுத்தியது.

அதன்படி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அன்று நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது. மேலும் பாஸ்டேக் இல்லாமல் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என கூறி, இரவு நேரத்தில் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து, வாகன ஓட்டிகளைப் பீதியடைய வைத்தது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, தேசிய நெடுஞ்சாலை இணைப்புகளுக்கான மதிப்பீடு மற்றும் தரவரிசையை வெளியிட்டு அவர் பேசினார். அப்போது, “பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட பிறகு, ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் சேமிக்க முடியும். சுங்க கட்டண வசூல் 80 சதவீதத்தில் இருந்து 93 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இப்படியும் கூச்சமில்லாமல் பொய் சொல்ல முடியுமா? : இந்தியர்களை வியப்பில் ஆழ்த்தும் அமைச்சர் நிதின் கட்கரி!

மத்திய அமைச்சரின் இத்தகைய பேச்சு நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த ஒரு மாசமாக தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாது, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 100ஐ கடந்த பெட்ரோல் விற்கப்படும் நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியால் எப்படி நா கூசாமல் இப்படி பொய் பேச முடிகிறது ? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், மத்திய அரசு பாஸ்டேக் முறையை நடைமுறை படுத்தியதால் 80 சதவீதத்தில் இருந்த வருவாயை 93 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளைக் காட்டிலும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தான் பாஸ்டேக் முறையால் பயனடைந்துள்ளதாகவும், ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடிக்கு ரூபாயை வாகன ஓட்டிகளிடமிருந்து மத்திய அரசு திருடப்போகிறது என சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories