இந்தியா

“நிதி ஆயோக் எதிர்ப்பை மீறி அதானிக்கு விமான நிலையங்களை ஒப்படைத்த மோடி அரசு” : வெளிச்சத்திற்கு வந்த மோசடி!

அதானிக்கு விமான நிலையங்களையும் கொடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, மத்திய நிதியமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

“நிதி ஆயோக் எதிர்ப்பை மீறி அதானிக்கு விமான நிலையங்களை ஒப்படைத்த மோடி அரசு” : வெளிச்சத்திற்கு வந்த  மோசடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சி அமைத்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்பரேட்டுக்கு ஆதரவான டெண்டர், பொதுத்துறையை கார்ப்பரேட் வசம் ஒப்படைப்பது என பல உதவிகளை முனைப்புடன் செய்து வருகிறது.

குறிப்பாக, நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பிரதமர் மோடியின் நண்பருமான கௌதம் அதானிக்கு, இந்தியாவிலுள்ள 6 விமான நிலையங்களை சுமார் 50 ஆண்டுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியாவில் மும்பை, அகமதாபாத், மங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 விமான நிலையங்களின் பராமரிப்புப் பணிகளும் தனியார்மயமாக்கப்பட்டு, அவை அதானியின் ‘அதானி எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்துக்கு (Adani Enterprises) வழங்கப்பட்டுள்ளன.

“நிதி ஆயோக் எதிர்ப்பை மீறி அதானிக்கு விமான நிலையங்களை ஒப்படைத்த மோடி அரசு” : வெளிச்சத்திற்கு வந்த  மோசடி!

இந்நிலையில்தான், இந்த 6 விமான நிலையங்களையும் அதானிக்கு கொடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, மத்திய அரசின் நிதியமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமானத் தளங்கள் அனைத்துமே முக்கியமான மற்றும் நாட்டின் முதலீடுகளில் ஒன்று என கருதப்படுவதால், ஒரே நிறுவனத்துக்கு 6 விமான நிலையங்களையும் வழங்குவது தவறு என்று நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை இரண்டாண்டுகளுக்கு முன்பே எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக 2018 டிசம்பர் 10 அன்று, பொருளாதார விவகாரங்கள் துறையின் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியான அந்த அறிக்கையில், “போதுமான தொழில்நுட்ப திறன் இல்லாதவராக ஏலதாரர் இருக்கும்போது அது பராமரிப்பை வெகுவாக பாதிக்கக்கூடும்.

“நிதி ஆயோக் எதிர்ப்பை மீறி அதானிக்கு விமான நிலையங்களை ஒப்படைத்த மோடி அரசு” : வெளிச்சத்திற்கு வந்த  மோசடி!

மேலும் ஒரே நிறுவனத்திற்கே அனைத்துப் பணிகளையும் வழங்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தினர் சேவைகளின் தரத்தில் சமரசம் செய்துகொள்ளவும் வாய்ப்பு உள்ளது” என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. ஆனால், நிதி ஆயோக்கின் எதிர்ப்பையும் மத்திய அரசின் ஆலோசகர்கள் புறந்தள்ளியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, அதானிக்கு விமான நிலையங்களைக் கொடுப்பதற்கு தடையாக இருக்கிறார் என்ற அடிப்படையில் அன்றைய நிதி அமைச்சக செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க், 2019 ஜூலையில் இடமாற்றம் செய்யப்பட்டார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாது, இதில் குறிப்பிடவேண்டிய, இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், விமான நிலையங்களின் பராமரிப்புப் பணிகளை அதானி நிறுவனம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதற்கு காரணம், கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட சிக்கல்களால் விமானங்கள் சரிவர இயக்கப்படாததால், இப்போதே விமான நிலையங்களை தன்வசம் கொண்டுவந்தால் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியது வரும் என்று தொடர்ந்து தள்ளிப்போட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories