இந்தியா

அமெரிக்கர்களுக்கு தலா 1400 டாலர் நிதி: ஜோ பைடன் அறிவிப்பு.. ரூ.20 லட்சம் கோடி திட்டம் என்னவானது Mr.மோடி?

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்கர்களுக்கு தலா 1400 டாலர் நிதி: ஜோ பைடன் அறிவிப்பு.. ரூ.20 லட்சம் கோடி திட்டம் என்னவானது Mr.மோடி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் பரவலால் உலக வல்லரசான அமெரிக்கா வரலாற்றில் இல்லாத கடுமையான பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. இதுவரையில் ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

இதுவரை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 3 லட்சத்து 85 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தினந்தோறும் 2 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இப்படி இருக்கையில் எதிர்வரும் ஜனவரி 20ம் தேதி அந்நாட்டு அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்கவுள்ளார்.

அதற்கு முன்னதாக, கொரோனாவால் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜோ பைடன் 1.9 லட்சம் டாலருக்கான திட்டத்தை வகுத்த்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் 138 லட்சத்து 811 கோடி ரூபாயாகும்.

இந்த திட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் அமெரிக்கர்களுக்கு தலா 1400 டாலர் (ஒரு லட்சம் ரூபாய்) நிதியுதவியாக வழங்கப்படும் என்றும், 41,500 கோடி டாலர் கொரோனா தடுப்பூசிக்கும், 44,00 கோடி டாலர் சிறுவணிகங்களுக்கும் செலவிடப்படும் என அறிவித்துள்ளார்.

அமெரிக்கர்களுக்கு தலா 1400 டாலர் நிதி: ஜோ பைடன் அறிவிப்பு.. ரூ.20 லட்சம் கோடி திட்டம் என்னவானது Mr.மோடி?

மேலும், கொரோனாவால் வேலையிழந்தவர்களுக்கு வாரந்தோறும் வழங்கப்படும் நிவாரணத் தொகை 300ல் இருந்து 400 டாலராக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட்டால் அமெரிக்கர்களுக்கு வசந்தகாலமாக அமையும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நாடாக இந்தியா தொடர்ந்து நீடித்து வருகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசு தற்சார்பு இந்தியா என்ற பெயரில் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு பூசல் திட்டங்களை அறிவித்திருந்தது.

இந்த சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் இதுவரையில் செயல்படுத்தப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான எந்த அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories