இந்தியா

“பிரதமர் மோடி கூறுவது அப்பட்டமான பொய்; இனி தீர்மானிக்க வேண்டியது அரசுதான்” - விவசாயிகள் திட்டவட்டம்!

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் விவகாரத்தில் அரசுதான் முடிவெடுக்க வேண்டும். நீதிமன்றம் மூலம் தீர்வுகாண இயலாது என்று அகில இந்திய விவசாய சங்கம் கூறியுள்ளது.

“பிரதமர் மோடி கூறுவது அப்பட்டமான பொய்; இனி தீர்மானிக்க வேண்டியது அரசுதான்” - விவசாயிகள் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரதமர் மீண்டும் மீண்டும் போராடும் விவசாயிகள் மீது குற்றம் சாட்டி மிக மோசமான அரசியல் செய்கிறார் என்றும் அகில இந்திய கிசான் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காணொளிக்காட்சி மூலம் அகில இந்திய கிசான் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அகில இந்திய கிசான் சங்க பொதுச் செயலாளர் ஹன்னாமோலா, “தேர்தலுக்கு முன்பு 50% உயர்த்தி வழங்குவதாக பா.ஜ.க கூறியது. ஆனால் இன்றும் 25% குறைவாகவே ஆதாரவிலை வழங்கப்பட்டுவருகிறது. ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்கிவருவதாக பிரதமர் கூறுவது அப்பட்டமான பொய்.

புதிய சட்டங்கள் மூலம் விவசாயிகளை நிலத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு கார்ப்பரேட்டுகளை நேரடியாக விவசாயம் செய்யவைக்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக 2017ல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது, அரசுதான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.

இதுவரை 5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுதொடர்பாகவும் நீதிமன்றத்தில் ஒரு தீர்வும் ஏற்படவில்லை. தற்போது வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்துக்கு வந்துள்ளது.

“பிரதமர் மோடி கூறுவது அப்பட்டமான பொய்; இனி தீர்மானிக்க வேண்டியது அரசுதான்” - விவசாயிகள் திட்டவட்டம்!

நீதிமன்றம் குழு அமைக்கலாம் என்று கருத்துக் கூறியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தீர்வு காண முடியாது. எவ்வளவு நாட்களுக்குத்தான் குளிரில் விவசாயிகள் போராடுவார்கள்? அரசுதான் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பின்னர், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுடன் வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்திய பிறகு பேட்டியளிக்கையில், உச்சநீதிமன்றம் 8 சங்கங்களை மட்டுமே வழக்கில் சேர்த்துள்ளது. அதில் அகில இந்திய கிசான் சபை உள்ளிட்ட தேசிய அளவிலான சங்கங்கள் இல்லை. போராடும் 5,000க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களையும் சேர்த்தால் தங்களது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories