இந்தியா

“10% உள்ஒதுக்கீடு; ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்”: புதுச்சேரியில் திமுக மாணவர் அணி தலைமையில் போராட்டம்!

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10% இட ஒதுக்கீடு வழங்க, துணைநிலை ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க மாணவர் அணி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

தமிழகத்தில் 7.5 சதவிகித ஒதுக்கிடு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது போல, புதுச்சேரி மாநிலத்திலும் நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணாக்கர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரியில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான உள் ஒதுக்கீட்டுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார். அதற்கான கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோது கிரண்பேடி மத்திய அரசுக்கு இந்த கோப்பினை அனுப்பியுள்ளார்.

வேண்டும் என்றே காலதாமதம் செய்வதற்காக துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது புதுச்சேரி மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில அரசும் ஆளுநரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

“10% உள்ஒதுக்கீடு; ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்”: புதுச்சேரியில் திமுக மாணவர் அணி தலைமையில் போராட்டம்!

இந்நிலையில், புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10% இட ஒதுக்கீடு வழங்க, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க மாணவர் அணி தலைமையில் மாணவர் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10% உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; மேலும் மருத்துவ கல்லூரிகளில் 50% சதவீத இட ஒதுக்கீட்டை புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி மாநில தி.மு.க மாணவர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை முன்பாக நடந்த இந்த போராட்டத்தில், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், முற்போக்கு மாணவர் கழகம், மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.

banner

Related Stories

Related Stories