தமிழ்நாடு

“நம்மைக் காக்கும் பணியில் தன்னை இழந்த ராணுவ வீரர் கருப்பசாமிக்கு வீரவணக்கம்” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!

காஷ்மீரின் லடாக் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு திருமணமாகி தமயந்தி என்ற மனைவியும், கன்னிகா வயது 7, வைஷ்ணவி வயது 4, பிரதீப் குமார் வயசு 1 ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ராணுவத்தில் நாயக் பொறுப்பில் பணியாற்றி வந்த கருப்பசாமி காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் பணியிலிருந்த போது அப்பகுதியில் பனி மலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்திற்கு ராணுவ அதிகாரிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கருப்பசாமியின் குடும்பத்தினர் மற்றும் திட்டங்குளம் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடலை விரைந்து சொந்த ஊரான கோவில்பட்டிக்கு கொண்டு வர வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தன்னுயிரை நினைக்காமல் நம் உயிரைக் காக்கும் ராணுவ சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட தமிழகத்தின் கோவில்பட்டியைச் சேர்ந்த...

Posted by M. K. Stalin on Thursday, November 19, 2020

மேலும் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தன்னுயிரை நினைக்காமல் நம் உயிரைக் காக்கும் ராணுவ சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட தமிழகத்தின் கோவில்பட்டியைச் சேர்ந்த வீரர் கருப்பசாமி அவர்கள் ஜம்மு-காஷ்மீர் லடாக் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

ராணுவப் பணியில் வீரர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்பவை. நம்மைக் காக்கும் பணியில் தன்னை இழந்த கருப்பசாமி அவர்களுக்கு வீரவணக்கம். தியாக வீரரைத் தந்த அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories