இந்தியா

“அம்பானிக்கும் அதானிக்கும் மட்டுமே விசுவாசம் காட்டுகிறார் பிரதமர் மோடி” - பீகாரில் ராகுல் காந்தி விளாசல்!

கடந்த தேர்தலின்போது 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக்கூறினார் மோடி. ஆனால் வேலைவாய்ப்பு வழங்கினாரா?

“அம்பானிக்கும் அதானிக்கும் மட்டுமே விசுவாசம் காட்டுகிறார் பிரதமர் மோடி” - பீகாரில் ராகுல் காந்தி விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நவாடா மாவட்டம் ஹிசுவாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகாருக்கு எதுவும் செய்யவில்லை. பீகார் மக்களிடையே பிரதமர் மோடி பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த தேர்தலின்போது 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக்கூறினார் மோடி. ஆனால் வேலைவாய்ப்பு வழங்கினாரா?

நீங்கள் உங்கள் பணத்தை வங்கிகளில் வைக்கவில்லை; பணக்காரர்களின் பைகளில் வைத்துள்ளீர்கள். கறுப்புப் பணத்திற்கு எதிராகப் போராடச் சொன்னார்கள். ஆனால் அதானி போன்றோர்கள் வங்கி வரிசையில் நிற்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

இராணுவ வீரர்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்காக நான் தலை வணங்குகிறேன் என பிரதமர் கூறுகிறார். ஆனால், அம்பானிக்கும் அதானிக்குமே அவர் விசுவாசமாகச் செயல்படுகிறார்.” என கடுமையாகச் சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories