இந்தியா

மோடி அரசின் வேளாண் சட்டம்: அத்தியாவசிய பொருட்களை நீக்கியதன் விளைவு.. வெங்காயம் கி.120 ரூபாய்க்கு விற்பனை!

வெங்காயத்தின் விலை மூன்றாவது நாளாகவும் கிலோ 120 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை ஆகி வருவதால் பொதுமக்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மோடி அரசின் வேளாண் சட்டம்: அத்தியாவசிய பொருட்களை நீக்கியதன் விளைவு.. வெங்காயம் கி.120 ரூபாய்க்கு விற்பனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த இரண்டு தினங்களாக உயர்ந்து வந்த வெங்காயத்தின் விலை மூன்றாவது நாளாகவும் கிலோ 120 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை ஆகி வருவதால் பொதுமக்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்திய மோடி அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் நிறைவேற்றியது. இதன் விளைவாக தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் போன்றவை அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என கணிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வெங்காயம் தற்போது அதிக விலையை எட்டியுள்ளது. கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகி வந்த வெங்காயத்தின் விலை தற்போது 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மோடி அரசின் வேளாண் சட்டம்: அத்தியாவசிய பொருட்களை நீக்கியதன் விளைவு.. வெங்காயம் கி.120 ரூபாய்க்கு விற்பனை!

அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பலத்த மழை காரணமாக வெங்காய வரத்து தமிழகத்தில் மிகவும் குறைந்து உள்ளது. தினமும் 90 லாரிகளில் கொண்டு வரப்படும் வெங்காயத்தின் அளவு, தற்போது 30 லாரிகளில் மட்டுமே வரும் காரணத்தால் வெங்காய வரத்து குறைந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தமிழகத்தில், கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகி வந்த வெங்காயத்தின் விலை தற்போது 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் 500 ரூபாய்க்கு ஒரு நேரத்திற்கு கூட காய்கறிகளை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மோடி அரசின் வேளாண் சட்டம்: அத்தியாவசிய பொருட்களை நீக்கியதன் விளைவு.. வெங்காயம் கி.120 ரூபாய்க்கு விற்பனை!

தற்போது வெங்காயத்தின் விலையை பார்க்கும்போது வசதி படைத்தவர்கள் கூட வாங்க முடியாத சூழலில் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அரசும் அமைச்சர்களும் மக்களுக்காக நடைபெறும் ஆட்சி என்றால் மக்களைப் பற்றியும் கவலைப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மோடி அரசாங்கம் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு இன்றளவும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் இந்த சட்டத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிக்கும் என எச்சரித்தனர்.

ஆனால், மோடி அரசின் ஆதரவாளர்கள், அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதாக குற்றம் சாட்டினார்கள். இந்நிலையில் தற்போது, போராட்டக்காரர்களின் எச்சரிக்கை வெங்காயத்தின் விலை உயர்வு மூலம் உண்மையாகியுள்ளது; விலைவாசி உயராது என கூறிய பா.ஜ.க ஆதரவாளர்கள் பொய் பிரச்சாரம் அம்பலமானது என சமூக ஆர்வலர்கள் விமர்த்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories