இந்தியா

திண்டுக்கலில் 7ம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவு செய்து கொலை : நீதி கோரி சலூன் கடைகள் மூடி போராட்டம்!

திண்டுக்கல் அருகே 7ம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த வழக்கில், தமிழக அரசு மேல்முறையிடு செய்திட கோரி தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்.

திண்டுக்கலில் 7ம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவு செய்து கொலை : நீதி கோரி சலூன் கடைகள் மூடி போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திண்டுக்கல் அருகே வீட்டில் தனியாக இருந்த 7ம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவு செய்து, மின்சாரம் செலுத்தி கொலை செய்த 12ம் வகுப்பு மாணவன் விடுதலையான தீர்பை தமிழக அரசு மேல்முறையிடு செய்திட கோரி தமிழகம் முழுவதும் 3.50 லட்சம் சலூன் கடைகள் மூடி தமிழக அரசுக்கு கவன ஈர்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜி.குரும்பபட்டி கிராமம். இதே ஊரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் வடமதுரையில் சலூன் கடை வைத்து சவரத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்களுக்கு பிறகு கலைவாணி என்ற மகள் பிறந்துள்ளார்.

கலைவாணி வடமதுரை அருகே உள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி பள்ளி கோடை கால விடுமுறை என்பதால் அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலைக்குச் சென்ற கலைவாணியின் தாயார் வேலை முடித்து திரும்பி வீட்டிற்கு வந்துள்ளார்.

திண்டுக்கலில் 7ம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவு செய்து கொலை : நீதி கோரி சலூன் கடைகள் மூடி போராட்டம்!

அப்போது வீட்டின் கதவு திறந்து இருந்துள்ளது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கலைவாணியின் உடலில் மின்சார வயருடன் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து வடமதுரை போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலிஸார் கலைவாணியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மகள் கலைவாணி இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி கலைவாணியின் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கலில் 7ம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவு செய்து கொலை : நீதி கோரி சலூன் கடைகள் மூடி போராட்டம்!

மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து தீவிர விசாரணை செய்த போலிஸார், வெங்கடேசன் குடியிருக்கும் வீட்டின் எதிர் புறம் வசிக்கும் தங்கராஜ் மகன், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கிருபானந்தன் என்ற 17 வயது மாணவனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் தனியாக இருந்த மாணவி கலைவாணியை பாலியல் துன்புறுத்தல் செய்து அவர் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து 17 வயது பள்ளி மாணவனை வடமதுரை போலிஸார் கைது செய்து சிறுவர் சிருத்தபள்ளியில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கலில் 7ம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவு செய்து கொலை : நீதி கோரி சலூன் கடைகள் மூடி போராட்டம்!

மேலும் அவர்கள் உறவினர்கள் கூறுகையில், கிருபானந்தன் உட்பட 3 பேர் சிறுமி கலைவாணியை பாலியல் வன்புணர்வு செய்து மின்சார வயர் மூலம் கலைவாணியின் உடலில் மின்சாரத்தை செலுத்தி கலைவாணியை கொலை செய்ததாகவும், போலிஸார் 3 பேரில் இரண்டு நபர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு, ஒருவரை மட்டும் கைது செய்து, மற்ற இரண்டு குற்றவாளிகளை போலிஸார் மூடி மறைப்பதாக குற்றம் சாட்டினர்.

இதில், உண்மை தன்மை இல்லை என்று மற்ற இருவர்களை போலிஸார் கைது செய்ய பட வில்லை. முதல் குற்றவாளியான கிருபானந்தன் வழக்கு மாவட்ட. குற்றவியல் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றது வழக்கில் 35 சாட்சிகளை விசாரணை செய்ததில் போதுமான சாட்சிகள் நிருபிக்க படாததால் குற்றவாளியாக கருத பட்ட கிருபாகரனை நீதிமன்றம் விடுதலை செய்தது.

திண்டுக்கலில் 7ம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவு செய்து கொலை : நீதி கோரி சலூன் கடைகள் மூடி போராட்டம்!

பாலியல் வல்லுறவு செய்து நடத்தபட்ட வழக்கில் போதுமான நியாயம் கிடைக்கவில்லை என்றும் தமிழக அரசு இந்த வழக்கை மேல்முறையிடு செய்திட வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2,500 கடைகள் மட்டும் இன்றி தமிழகத்தில் உள்ள 3.50 லட்சம் முடி திருத்தும் கடைகள் மூடி தமிழக அரசுக்கு கவன ஈர்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்.

banner

Related Stories

Related Stories