இந்தியா

“தொல்லியல் துறை படிப்பில் ‘தமிழ் மொழி’ சேர்க்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பிலான பட்டயப் படிப்பிற்கானத் தகுதியில், தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை இணைத்து வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தொல்லியல் துறை படிப்பில் ‘தமிழ் மொழி’ சேர்க்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தொல்லியல் துறை பட்டயப்படிப்பு அறிவிப்பில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்னதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் அறிஞர்கள் தமிழ் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டு இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட இருந்தது.

இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள மறு அறிவிப்பில் தகுதிக்கான பிரிவில் செம்மொழி தமிழ் மொழி சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. செம்மொழி அந்தஸ்து உள்ள மற்ற மொழிகளும் சேர்க்கப்பட்டு தொல்லியல் துறை இயக்குனர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை ஆய்வகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பிலான பட்டயப் படிப்பிற்கானத் தகுதியில், தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை இணைத்து வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

“மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பிலான பட்டயப் படிப்பிற்கானத் தகுதியில் தமிழ் மொழி இடம்பெறாமல் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய நிலையில், திருத்தப்பட்ட அறிவிக்கையில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை இணைத்து வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பண்பாட்டு அடித்தளமாக விளங்குபவை மொழிகளே! அவற்றைக் கையாள்வதில் இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய பா.ஜ.க கடைபிடிக்கவும் வேண்டாம்; அதை மாநில அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்க்கவும் வேண்டாம்!”

banner

Related Stories

Related Stories