இந்தியா

‘கொரோனா பலிகளை மறைக்கும் இந்தியா’ என்ற ட்ரம்புக்கு ‘நமஸ்தே ட்ரம்ப்’ பேரணியை மோடி மீண்டும் நடத்துவாரா?

கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை இந்திய மறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘கொரோனா பலிகளை மறைக்கும் இந்தியா’ என்ற ட்ரம்புக்கு ‘நமஸ்தே ட்ரம்ப்’ பேரணியை மோடி மீண்டும் நடத்துவாரா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்க அதிபருகான தேர்தல் வருகிற நவம்பர் 3ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பிடனும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸும் போட்டியிடுகிறார். இதனையொட்டி, வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் மூன்று முறை விவாதங்கள் நடைபெறும்.

அதன்படி நேற்று நடந்த முதல் விவாத நிகழ்ச்சியில், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா மோசான நிலையை கையாண்டிருக்கிறது என ஜோ பிடன் குற்றஞ்சாட்டினார்.

‘கொரோனா பலிகளை மறைக்கும் இந்தியா’ என்ற ட்ரம்புக்கு ‘நமஸ்தே ட்ரம்ப்’ பேரணியை மோடி மீண்டும் நடத்துவாரா?

அதனை மறுத்த டொனால்ட் ட்ரம்ப், சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனாவால் உண்மையாக உயிரிழந்தோரின் எண்ணிக்கைகள் குறைத்து சொல்லப்படுகிறது.

இந்த மூன்று நாடுகளும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுகாறும் இந்தியாவையும், பிரதமர் மோடியையும் எல்லாவற்றுக்கும் புகழ்ந்து பாராட்டி வந்த டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இது தொடர்பாக மோடியை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், ரஷ்யா, சீனாவுடன் இந்தியாவை இணைத்து டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியதை சுட்டியக்காட்டிய அவர், தனது அன்பு நண்பரான டொனால்ட் ட்ரம்பை கவுரவிக்க மற்றுமொரு நமஸ்தே ட்ரம்ப் பேரணியை பிரதமர் மோடி நடத்துவாரா? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories