இந்தியா

“மோடி ஆட்சியில் அதிகரித்த கொலை குற்றங்கள்”: நாள்தோறும் 79 பேர் கொல்லப்பட்டதாக ‘NCRB’ அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் 28,918 கொலைகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சிபி.ஆர்) தெரிவித்துள்ளது.

“மோடி ஆட்சியில் அதிகரித்த கொலை குற்றங்கள்”: நாள்தோறும் 79 பேர் கொல்லப்பட்டதாக ‘NCRB’ அதிர்ச்சி ரிப்போர்ட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் 28,918 கொலைகள் நடந்துள்ளதாகவும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 79 பேர் கொல்லப்பட்டுள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிபிஆர்) தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றம் பற்றிய தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிபிஆர்) புள்ளிவிவரத்துடன் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நாடுமுழுவதும் கடந்த 2018ம் ஆண்டில் சுமார் 29,017 கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், 2019ம் ஆண்டில் 28,918 கொலைகள் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் நாள்தோறும் சராசரியாக 79 பேர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

“மோடி ஆட்சியில் அதிகரித்த கொலை குற்றங்கள்”: நாள்தோறும் 79 பேர் கொல்லப்பட்டதாக ‘NCRB’ அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்த கொலைகளில், தகராறு காரணமாக 9,516 பேர் கொல்லப்பட்டதாகவும், தனிப்பட்ட பகை, பழிக்குப் பழிவாங்குதல் போன்ற காரணங்களினால் 3,833 கொலைகளும், ஆதாயத்திற்காக மட்டும் 2,573 கொலைகள் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த 2019ம் ஆண்டின் நடைபெற்ற கொலைக் குற்றங்கள் 2018ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2019-ல் கொலைக் குற்றங்கள் எண்ணிக்கை வெறும் 0.3 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

அதேப்போல், 2019ம் ஆண்டில் 1,05,037 கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த கடதல் வழக்கில் 23,104 பேர் ஆண்கள் என்றும் 84,921 பேர் பெண்கள் என்றும் சுமார் 71,264 பேர் குழந்தைகள் எனவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories