இந்தியா

விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் மனு!

விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்துசெய்யக் கோரி தி.மு.க சார்பில் திருச்சி சிவா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்துசெய்யக் கோரி தி.மு.க சார்பில் திருச்சி சிவா எம்.பி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பா.ஜ.க அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது, சட்டவிரோதமானது என்பதால் அவற்றை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

விவசாயம் மாநிலப் பட்டியலில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள விவசாய சட்டங்களைச் செயல் இழக்கச் செய்யும் விதமாக இந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்தைக் கேட்காமல் நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி ஜனநாயக விரோதமாக இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கான விடியோ ஆதாரங்களை பின்னர் தாக்கல் செய்வதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை எல்லாம் குறிப்பிட்டு குடியரசுத் தலைவருக்கு 20 கட்சிகள் புகார் அளித்தன. அதனையும் மீறி சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, விவசாயிகளின் நலனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மூன்று மசோதாக்காளையும் ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories