இந்தியா

“விவசாயிகளுக்கு மிகப்பெரும் நம்பிக்கை துரோகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இழைத்து விட்டார்”: கனிமொழி MP!

வேளாண் மசோதாவை ஆதரித்து விவசாயிகளுக்கு மிகப்பெரும் நம்பிக்கை துரோகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இழைத்துவிட்டார் என தி.மு.க எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

“விவசாயிகளுக்கு மிகப்பெரும் நம்பிக்கை துரோகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இழைத்து விட்டார்”: கனிமொழி MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜனநாயகத்துக்கு விரோதமான வகையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்கல் இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இருப்பதாகவும், அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டாம் என குடியரசுத் தலைவருக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

இந்நிலையில், வேளாண் மசோதாக்களை ஆதரித்து வாக்களித்த அ.தி.மு.க அரசு விவசாயிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை இழைத்திருப்பதாக, மக்களவை தி.முக உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

“விவசாயிகளுக்கு மிகப்பெரும் நம்பிக்கை துரோகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இழைத்து விட்டார்”: கனிமொழி MP!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வேளாண் மசோதாக்களை நாடே எதிர்த்து வருகின்றது. நாடு முழுவதும் வேளாண் மசோதாவை எதிர்த்து விவசாயிகள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

மசோதவுக்கு எதிரான போராட்டத்தில், வட மாநிலங்கள் கூட பற்றி எரிய கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்திருக்கிறார். ஆனாலும், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக இந்த மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. இதனால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை அழைத்து தி.மு.க தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துப்போவதாக அறிவித்துள்ளார்.

ஆனால், மத்திய அரசின் பினாமியாக செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் மசோதாவை வரவேற்று இருப்பது, விவசாயிகளுக்கு எதிரானது. மேலும், தன்னை ஒரு விவசாயி என கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி இம்மசோதாக்களை ஆதரித்தது விவசாயிகளுக்கு செய்து இருக்கிற மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கனிமொழி எம்.பி, வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைத்து விவசாயிகளையும் கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கும் சட்டமே புதிய வேளாண் சட்டம். பொது விநியோக முறையையே அடியோடு சீர்குலைக்கும் இச்சட்டத்தை எதிர்த்து போராட வேண்டியது நம் அனைவரது கடமை. #ScrapAntiFarmerActs” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories