இந்தியா

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் வேளாண் சட்டத்தை கைவிடுக : நாடு முழுவதும் போராட்டம் ! #ScrapAntiFarmerActs

வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜனநாயகத்துக்கு விரோதமான வகையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்கல் இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இருப்பதாகவும், அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டாம் என குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

இந்நிலையில், எதிர்கட்சிகள், விவசாயிகளின் போராட்டத்தை மதிக்காத மோடி அரசுக்கு எதிராக நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் மூன்று நாட்களாக தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அம்மாநிலங்களின் வழியே செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேப்போல், நேற்றைய தினம் டெல்லி இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கையில் தீ பந்தங்களை ஏந்தி கிரஷின்பவன் நோக்கி பேரணியாகச் சென்றனர். அங்கு அவர்களை போலிஸார் தடுத்து நிறுத்தினர். மாலை 7 மணி அளவில் இந்த போராட்டம் நடைபெற்றது.

அப்போது கைகளில் விவசாய சட்டங்களுக்கு எதிரான பேனர்கள், தீ பந்தங்களை ஏந்தியபடி மோடி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி பேரணையாகச் சென்று ஆர்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், வேளாண் மசோதாகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது பாரதி கிசான் சங்கம் உள்பட மொத்தம் 31 விவசாய சங்கள் இன்று நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அதன் ஒருபகுதியாக சென்னை தாம்பரத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் வேளாண் சட்டத்தை கைவிடுக : நாடு முழுவதும் போராட்டம் ! #ScrapAntiFarmerActs

அதுமட்டுமல்லாது விவசாயிகளின் விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் விவசாய மசோதாவைத் திரும்பப்பெற வலியுறுத்தி #ScrapAntiFarmerActs என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டி செய்யப்பட்டுகிறது.

மேலும், இதுகுறித்து தி.மு.க எம்.பி கனிமொழி அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைத்து விவசாயிகளையும் கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கும் சட்டமே புதிய வேளாண் சட்டம். பொது விநியோக முறையையே அடியோடு சீர்குலைக்கும் இச்சட்டத்தை எதிர்த்து போராட வேண்டியது நம் அனைவரது கடமை. #ScrapAntiFarmerActs” என அந்த ஹேஸ்டேக்குடன் பகிர்ந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories